/* */

வாராந்திர குறைகேட்பு முகாம்: கோரிக்கை களுக்காக 469 மனுக்கள் அளித்த பொதுமக்கள்

சிறந்த விடுதிகளாக தேர்வான 3 விடுதி காப்பாளர்களுக்கு ஆட்சியர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழ், பரிசு வழங்கினார்

HIGHLIGHTS

வாராந்திர குறைகேட்பு முகாம்: கோரிக்கை களுக்காக 469 மனுக்கள் அளித்த பொதுமக்கள்
X

 மாவட்ட அளவில் சிறந்த விடுதிகளாக தேர்வு செய்யப்பட்ட 3 விடுதி காப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழ், பரிசுத் தொகை மற்றும் கேடயங்களை வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்.கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில்நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 469 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு உத்தரவிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியரகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலவிடுதிகளில் 2021-2022 ஆம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறந்த விடுதிகளாக தேர்வு செய்யப்பட்ட 3 விடுதி காப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழ், பரிசுத் தொகை மற்றும் கேடயங்களை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், உதவி ஆணையர் (கலால்) எம்.மாரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மக்கள் குறை தீர்க்கும் நாள் என்பது தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் அடிப்படைச் சேவைகளில் மக்கள் குறைகளைச் சந்திக்கும்போது, உரிய அலுவலர்களை அணுகிக் குறைகளைத் தெரிவிக்கும் நாளாகும். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கடைபிடிக்கப்படுகிறது. அன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.

இது தவிர, மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் மாதத்தில் ஒரு நாள் ஒரு குக்கிராமத்திற்கு நேரடியாகச் சென்று முகாமில் பங்கேற்பார்கள். மாவட்டத் தலைநகருக்குச் செல்லும் வாய்ப்பும் வசதியும் இல்லாத அப்பகுதி-சுற்று வட்டார பொது மக்கள் இந்த முகாமைப் பயன்படுத்தி தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கிலும் நடத்தப்படுகிறது இங்கு வரும் பொதுமக்களின் குறைகளுக்கு அந்த முகாமிலேயே பெரும்பாலும் தீர்வு காணப்படுகிறது.

Updated On: 13 Dec 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...