/* */

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுகவிற்கு வாக்களியுங்கள்: எம்எல்ஏ பேச்சு

வாக்குறுதிகளை படிப்படியாக முழுமையாக நிறைவேற்றுவதற்கு உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்பு அவசியம்

HIGHLIGHTS

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுகவிற்கு வாக்களியுங்கள்: எம்எல்ஏ பேச்சு
X

மாவட்ட ஊராட்சி ஒன்பதாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை தேர்தல் பிரச்சாரம்

திமுக அரசு தேர்தலில் அளித்துள்ள வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென, கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை வலியுறுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி 9-ஆவது வார்டுக்கான இடைத்தேர்தல் வருகின்ற அக்டோபர் 9 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்த வார்டில், திமுக சார்பில் கை.பழனிச்சாமி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார்.

அவர் பேசும்போது, தமிழக முதல்வர் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். தேர்தலில் அளித்துள்ள வாக்குறுதிகளை படிப்படியாக முழுமையாக நிறைவேற்றுவதற்கு, உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்பு அவசியம். அந்த வகையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கை.பழனிச்சாமியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும். இந்தப் பகுதி மக்களின் கோரிக்கைகள் என்ன என்பதை நான் நன்கு அறிவேன். பல கிராம்ஙகளில் குடிநீர், சாலை வசதிகள் இன்றும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை அவற்றையெல்லாம், நீங்கள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராக தேர்வு செய்யவுள்ள வை.பழனிச்சாமியுடன் இணைந்து நிறைவேற்றுவோம் என்றார்.

பணிக்கொண்டான் பட்டியில் தொடங்கிய பிரசாரம் துடையூர், முத்துக்காடு, வேங்கை வயல், காவேரிநகர், கிளியூர், பூங்குடி, வெள்ளனூர், முத்துடையான்பட்டி, வடசேரிப்பட்டி, தாவூதுமில், காமராஜநகர், ரெங்கம்மாள் சத்திரம், மேலூர், இரும்பாளி, புதுப்பட்டி, மெய்வழிச்சாலை, சத்தியமங்கலம், பொம்மாடிமலை, நாத்தாமலை, அம்மாச்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக கோப்பிக்காட்டில் நிறைவடைந்தது.

பிரச்சாரத்தில், திமுக ஒன்றியச் செயலாளர் மாரிமுத்து, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா மற்றும் பாரிவள்ளல், எம்.ஜோஷி, ஆர்.சி.ரெங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Sep 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து