/* */

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கீதாஜீவன் உறுதிஅளித்துள்ளார்

HIGHLIGHTS

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
X

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் சுகந்தி

கடந்த ஆட்சி காலத்தில் இருந்ததைப் போல் அல்லாமல் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் சுகந்தி பேட்டி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் சுகந்தி, கடந்த 18ஆம் தேதி புதுக்கோட்டையில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் ஒருவர் கர்ப்பமடைந்து, வயிற்று வலியால், புதுக்கோட்டை ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதே அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் தான் அவர் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டுள்ளார். குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட ஒருவர் எவ்வாறு கருத்தரிக்க முடியும். அப்படி என்றால் முறையாக அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றுதான் அர்த்தம். இதனால் ஒரு உயிர் போயிருக்கிறது. இதுகுறித்து காவல்துறையினர் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளனர். உரிய விசாரணை செய்து உண்மையான குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை வேண்டும் என்று மாதர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இறந்த பெண்ணிற்கு இரண்டு கைக் குழந்தைகள் உள்ளது. அந்த பெண்ணின் குடும்ப சூழ்நிலை கருதி, குடும்பத்திற்கு தமிழக அரசு 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். அதே போன்று, ஒருவருக்கு அரசு வேலைம் வழங்க வேண்டும். தற்போது தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் குற்றங்கள் பெண்களுக்கான வன்கொடுமைகள் ஆகியவை அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது அமைந்துள்ள திமுக அரசிடம் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். அமைச்சர் கீதாஜீவன் மாதர் சங்க அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது கடந்த ஆட்சிகாலத்தை போன்று இல்லாமல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதி அளித்துள்ளார்.

தமிழக அரசு உறுதி அளித்தது போன்று செய்யாவிட்டால், மாதர் சங்கம் அரசிற்கு எதிராக போராட்டம் நடத்தும். கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பெண் ஒருவர் கைக்குழந்தையை அடிப்பது போன்ற காட்சிகள் உலா வருகிறது. அது மிகவும் அதிர்ச்சிக்குரிய சம்பவமாக உள்ளது. அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று முதல் கட்டத்தில் தெரிய வந்தது. ஆனால் தற்போது அவர் மனநலம் பாதிக்கப் படவில்லை என்று கூறுவதாக தகவல் வந்துள்ளது. மனநலம் பாதிக்கப்படாமல் குழந்தையை சித்திரவதை செய்திருந்தால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை சமூக வலை தளங்களில் வீடியோவாக பதிவிடாமல், சம்பவம் குறித்த தகவல்களை மட்டும் பதிவிட்டால் பல்வேறு விதமான பதற்றங்களை தவிர்க்கலாம் என்றார்.

Updated On: 30 Aug 2021 2:57 PM GMT

Related News