/* */

இந்தியாவில் எந்த முதலமைச்சரும் பெறாத வெற்றியை தமிழக முதல்வர் பெற்றுள்ளார்

கிராமப்புற பெண்கள் கல்லூரி வரை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் திருமண உதவி திட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார்

HIGHLIGHTS

இந்தியாவில் எந்த முதலமைச்சரும்  பெறாத வெற்றியை தமிழக முதல்வர் பெற்றுள்ளார்
X

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியுடன் கூடிய 8 கிராம் தங்க நாணயங்களை பயனாளிகளுக்கு, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் இன்று வழங்கினார்கள்.

இந்தியாவில் எந்த முதலமைச்சரும் பெறாத வெற்றியை நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழக முதலமைச்சர் பெற்றுள்ளார் என்றனர் அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன்.

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியுடன் கூடிய 8 கிராம் தங்க நாணயங்களை பயனாளிகளுக்கு, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் இன்று வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் 10 மற்றும் 12ம் வகுப்பு வரை படித்த 187 நபர்களுக்கு தலா ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கம் வீதம் ரூ.46,75,000 நிதியுதவியும் 1496கிராம் தங்கமும், பட்டம் மற்றும் பட்டயம் படித்த 270 நபர்களுக்கு தலா ரூ.50,000 மற்றும் 8கிராம் தங்கம் வீதம் ரூ.1,35,00,000 நிதியுதவியும் 17280 கிராம் என ஆக மொத்தம் 457 பயனாளிகளுக்கு ரூ.1,81,75,000 (ரூபாய் திருமண நிதியுதவி மற்றும் ரூ.1,74,57,400 மதிப்பிலான 3656 கிராம் தங்கத்தையும் அமைச்சர்கள் வழங்கினர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சட்டத்துறை அமைச்சராக வரும் பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட சிறப்பான திட்டம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் இந்தச் திட்டம் இரண்டு வகையான பயன்கள் உள்ளது ஒன்று ஏழைப் பெண்களுக்கு திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மற்றும் அதேபோல் ஏழை குடும்பத்தில் உள்ள பெண்கள் படிப்பு அறிவை அதிகரிக்க வேண்டும் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு படித்தால் அவர்களுக்கு உதவி தொகை வழங்குகின்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.

அதன் மூலமாக கிராமப்புறத்தில் உள்ள பெண்கள் அதிக அளவில் பட்டப்படிப்புகளை படிப்பதற்கு ஏதுவாக இந்த திட்டம் இருந்து வருகிறது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பார். அதேபோல் இந்தத் திட்டத்தின் மூலமாக ஏழை பெண்கள் திருமணம் ஆகாதவர்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமும் கிராமப் புறங்களில் உள்ள பெண்கள் கல்லூரி படிப்பு வரை படிக்க வேண்டும் என்கின்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் விதத்திலும் இந்த திருமண உதவி திட்டத்தை கொண்டு வந்தார்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் வழியில் வந்துள்ள தற்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் அதேபோல் சிறப்பாக தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நிதிநிலை சரியில்லை என சொல்லி பலருக்கும் இந்த திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தனர்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தாலிக்கு தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் எவ்வளவு பாக்கி வைத்து சென்றுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தாலிக்கு தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேற செலவினங்களுக்கு பயன்படுத்தி விட்டு ஏழை சகோதரிகள் மற்றும் தாய்மார்களுக்கு கிடைக்கவேண்டிய அந்த பணத்தினை கூட தராமல் அவர்கள் வயிற்றிலே அடித்த ஆட்சிதான் கடந்த அதிமுக ஆட்சி என்பதை இங்கே நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் எந்த அரசும் பெறாத ஒரு மகத்தான வெற்றியை தமிழக முதலமைச்சர் பெற்றுள்ளார் என்றார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

பின்னர் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசுகையில், 9 மாத ஆட்சிக்கு மக்கள் பாராட்டு தெரிவிக்கும் வகையில் நடைபெற்று முடிந்த நகராட்சி மற்றும் மாநகராட்சி பேரூராட்சி தேர்தலில் மக்கள் வாக்குச் சீட்டின் மூலம் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இரவு பகல் பாராமல் தமிழக முதலமைச்சர் மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

எப்பொழுதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருகிறதோ ஏழை எளிய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் திருமண உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. உதவித்தொகை வழங்கும் திட்டத்தோடு பெண்களின் கல்வி முன்னேற்றம் அடைய செய்யும் விதத்தில் திருமண காலங்களில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் சிறப்பாக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் காலகட்டத்தில் செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்த திட்டம் முறையாக வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பெண்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்ற திட்டம் இலவச பேருந்து பயண திட்டம் தமிழக அரசு அமைந்து 9 மாத கால கட்டத்தில் 85 கோடி பேர் இலவச பேருந்த பயன்படுத்தி உள்ளனர் . இது போன்ற மிகச் சிறந்த திட்டங்களை தமிழக முதலமைச்சர் செயல்படுத்தி உள்ளார். பொருளாதாரத்திலும் தமிழ் நாடு முன்னேற வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் பல்வேறு தொழிற் சாலைகளைக் கொண்டு வந்து தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.

தமிழக முதலமைச்சர் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைக்கின்ற ஒரே முதலமைச்சர் தமிழக முதலமைச்சர்தான் என்றார் அமைச்சர் மெய்யநாதன்.இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை.முத்துராஜா, சேர்மன் சின்னையா மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Updated On: 3 March 2022 1:57 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  3. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  4. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  5. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  9. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  10. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்