திருக்குறள் முற்றோதலுக்கு மாணவ, மாணவிகள் நாளைக்குள் (நவ.25 ) விண்ணப்பிக்கலாம்

பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு ரூ.10000- பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருக்குறள் முற்றோதலுக்கு மாணவ, மாணவிகள் நாளைக்குள் (நவ.25 ) விண்ணப்பிக்கலாம்
X

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதலுக்கு மாணவ, மாணவிகள் நாளைக்குள் (25.11.2022 ) விண்ணப்பிக்கலாம்.

உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துகளை மாணவ மாணவியர் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்கச் செய்யும் வகையில் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன்பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு ரூ.10000- பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் 2022-23ஆம் ஆண்டிற்கு மாணவ மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முற்றோதலில் பங்கேற்கும் மாணவ மாணவியர் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன்;;பெற்றவர்களாக இருத்தல் வேண்டும் திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்புப் பெயர்கள், உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகப் கொள்ளப்பெறும்.

முற்றோதலில் பங்கேற்கும் மாணவ மாணவியர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறி குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு புதுக்கோட்டை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநரால் பரிந்துரைக்கப்படும். ஏற்கெனவே இம்முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டு;ம் கலந்து கொள்ள இயலாது. திருக்குறள் முற்றோதலுக்கான விண்ணப்பங்களை புதுக்கோட்டை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் : pdkttamilthai@gmail.com -என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 04322-228840 (9952280798) என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பெற்ற விண்ணப்பங்களை மாணவ மாணவியர் 25.11.2022ஆம் நாளுக்குள் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், புதுக்கோட்டை - 622 005. புதுக்கோட்டை மாவட்டம். (மின்னஞ்சல் முகவரி :; https://tamilvalarchithurai.tn.gov.in) என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைத்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

உலகப் பொதுமுறையாம் திருக்குறளை இளம் வயதிலேயே மாணவ மாணவியர் மனப்பாடம் செய்தால் வாழ்நாள் முழுவதும் மனத்தில் நிற்கும்.திருக்குறள் மனித இனத்தின், குறிப்பாக தமிழர்களின் மாபெரும் பொதுவுடைமைச் சொத்து. திருக்குறள் நெறிகள் பரவப்பரவ , அறம் பரவும். தமிழ் மொழிப்பயிற்சியும், மாணவர்களுக்குக் கிடைக்கும். அறமும், மொழியும் வளரும். மேலும் அறமும், திறனும், ஒருங்கே வாய்ந்த இளைஞர் சமுதாயம் உருவாகிட வலுவான அடித்தளமாக திருக்குறள் மனனம் அமையும். சமுதாயத்தில் நல்லிணக்கமும், மனித நேயமும் வளரும். திருக்குறள் பொருள் பொதிந்த, பொருள் நிறைந்த, இகலில்லா இன்ப வாழ்க்கையின் கையேடு. ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கும் மேலாக, 1330 திருக்குற ளையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவ மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை வழங்கி வருகிறது.


Updated On: 24 Nov 2022 3:30 PM GMT

Related News

Latest News

 1. தேனி
  தேனியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்.. நிரந்தர தீர்வுக்கு செய்ய...
 2. தேனி
  தேனி மாவட்டத்தில் இரண்டாம் போக நெல் நடவுப் பணிகள் நிறைவு..
 3. மதுரை மாநகர்
  இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு...
 4. விராலிமலை
  கீரனூரில் இருந்து புலியூருக்கு பேருந்து வசதி: ஜனநாயக மாதர் சங்கம்...
 5. துறைமுகம்
  கடற்படை தினத்தையொட்டி போர்க் கப்பல்களை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்
 6. சென்னை
  திருநெல்வேலி எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவு.. ஆதிதிராவிடர் மாநில ஆணையம்...
 7. புதுக்கோட்டை
  வருவாய்த்துறையினரை கண்டித்து சிபிஎம் கட்சியினர் காத்திருப்புப்...
 8. சென்னை
  தகுதி இல்லாதவர்களுக்கு அரசு வீடுகள் ஒதுக்கீடு.. அதிகாரிகள் மீது...
 9. சிவகாசி
  விபத்தை ஏற்படுத்திய பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்
 10. இந்தியா
  விழிஞ்சம் துறைமுகத்தில் மத்தியப் படை பாதுகாப்பு கோரி அதானி குழுமம்...