/* */

மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையாெட்டி புதுக்கோட்டையில் மாநில அளவிலான கபடி போட்டி

முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு எம்எல்ஏ முத்துராஜா ஏற்பாட்டில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையாெட்டி புதுக்கோட்டையில் மாநில அளவிலான கபடி போட்டி
X

புதுக்கோட்டை திலகர் திடலில் முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு எம்எல்ஏ முத்துராஜா ஏற்பாட்டில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு எம்எல்ஏ முத்துராஜா ஏற்பாட்டில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் பல்வேறு வகையில் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது என தொடர்ந்து 10 நாட்களாக பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்திலும் தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் விழா பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா ஏற்பாட்டில் இன்று திலகர் திடலில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கு பெரும் மாநில அளவிலான கபடி போட்டி இன்று துவங்கி நாளை வரை தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இன்று துவங்கிய மாநில அளவிலான கபடிப் போட்டியில் சென்னை, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி திண்டுக்கல் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, உள்ளிட்ட தமிழகத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து கபடி வீரர்கள் கலந்துகொண்ட கபடி போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியினை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவ முத்துராஜா புதுக்கோட்டை நகர மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்ற துணைத்தலைவர் லியாக்கத் அலி, உள்ளிட்ட திமுக கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர். முதல் போட்டியில் தமிழக காவல் அணியும் கோயம்புத்தூர் தேக்கம்பட்டி அணியும் மோதியது இதில் தமிழக காவல்துறை அணி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து போட்டி இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் அணிக்கு முதல் பரிசாக கோப்பை மற்றும் ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் இரண்டாவது பரிசாக கோப்பை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் மூன்றாவது பரிசாக கோப்பை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் ஆண்களுக்கு வழங்கப்படுகிறது.

அதேபோல் வெற்றி பெறும் பெண்களுக்கு முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் கோப்பையும் இரண்டாவது பரிசாக 40 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பையும் மூன்றாவது பரிசாக இருபத்தைந்தாயிரம் ரூபாயும் கோப்பையும் வழங்கப்பட இருக்கிறது. புதுக்கோட்டையில் நடைபெறும் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டியை காண்பதற்காக 500க்கு மேற்பட்ட பெதுமக்கள் கலந்து கொண்டு விசில் அடித்தும் கை தட்டியும் ரசித்து வருகின்றனர்.

Updated On: 5 March 2022 1:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...