/* */

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கு: குற்றவாளிகள் வாக்குமூலம்

குற்றவாளிகள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

HIGHLIGHTS

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கு: குற்றவாளிகள் வாக்குமூலம்
X

கொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ பூமிநாதன்(பைல் படம்)

திருச்சி நவல்பட்டு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி நவல்பட்டு காவல் உதவி ஆய்வாளர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆடு திருடும் கும்பலை பிடிப்பதற்காக விரட்டிச் சென்றபோது புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்துப்பட்டி அருகே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு சிறார்கள் உள்பட .மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த கொலை வழக்கில், மணிகண்டன் தான் முக்கிய குற்றவாளியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மணிகண்டன் மற்றும் இரண்டு சிறுவர்களை தனித்தனியாக வைத்து காவல்துறையினர் விசாரணை செய்து வாக்குமூலம் வாங்கி உள்ளனர்.

துப்பு துலங்கியது எப்படி..

காவல் உதவி ஆய்வாளரின் வாக்கி டாக்கி மற்றும் அவருடைய செல்போன் ஆகியவை அவர் கொலை செய்யப்பட்ட அருகிலுள்ள மழைநீர் தேங்கி இருந்த பள்ளத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. தண்ணீரில் விழுந்ததால் அந்த செல்போன் ஆன் ஆக வில்லை என்று கூறப்படுகிறது.இந்நிலையில் காவல்துறை உதவி ஆய்வாளர் பூமிநாதனின் செல்போன் எண்ணை டிராக் செய்தபோது

அவர் சக காவலர்கள் சித்திரவேலு மற்றும் சேகர் ஆகியோருக்கு போன் செய்ததோடு மற்றொரு நம்பருக்கும் போன் செய்து பேசியுள்ளது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து அந்த நம்பரை காவல்துறையினர் தொடர்பு கொண்டபோது அந்த நம்பர் தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே உள்ள தோகூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் நம்பர் என்பது தெரியவந்தது.

உடனடியாக தனிப்படை போலீசார் அந்த கிராமத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தபோது அந்த நம்பர் மணிகண்டனின் தாயார் உடையது என்பது தெரியவந்தது. காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் மணிகண்டனின் தாயாரிடம் பேசியது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மணிகண்டனின் தாயாரை காவல்துறையினர் மண்டையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

அதன் பிறகு தான் குற்றவாளி மணிகண்டன் நம்பர் பெறப்பட்டு அந்த நம்பரை டிராக் செய்தபோது அவர்கள் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ள கே.புதுப்பட்டி கிராமத்தில் இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர்.

போலீசார் விசாரணையில் குற்றவாளிகள் அளித்த வாக்குமூலம்..

இதில் 3 பேரும் ஆடு திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்தபோது காவல்துறை உதவி ஆய்வாளர் பூமிநாதன் தங்களை பின் தொடர்ந்து வந்து பள்ளத்துப்பட்டி அருகே மடக்கிப் பிடித்து விட்டதாகவும், தங்களை அமரவைத்து விசாரணை மேற்கொண்டு மற்ற காவலர்களையும் இங்கு வருமாறு தகவல் அழைத்ததாகவும் மேலும் காவல்துறை உதவி ஆய்வாளர் பூமிநாதன், மணிகண்டனின் தாயார் நம்பரை பெற்று அவருக்கு தொடர்பு கொண்டு இந்த சம்பவம் தொடர்பாக கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன் தனக்கு அருகில் இருந்த கல்லை எடுத்து பின்பக்கமாக தூக்கி வீசி எறிந்த போது காவல்துறை உதவி ஆய்வாளர் பூமிநாதன் தலையில் பட்டதாகவும், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததை தொடர்ந்து, பயத்தில் இரண்டு சிறுவர்களும் ஓடிச்சென்று அருகில் உள்ள ரயில்வே ட்ராக் அருகே சென்று நின்று கொண்டதாகும் தெரிவித்துள்ளனர். தங்களை கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மணிகண்டன் மட்டும் தான் கையில் வைத்திருந்த ஆடு அறுக்கும் அரிவாளால் சரமாரியாக பூமிநாதனை வெட்டியதாகவும் அதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது மணிகண்டன் மற்ற இரண்டு சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பித்து வந்து விட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும் காவல்துறை உதவி ஆய்வாளர் பூமிநாதனின் பிரேத பரிசோதனையில் அவர் தலையில் கல்லால் தாக்கப்பட்ட பிறகுதான் அவரை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்துள்ளதாகவும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளர்.

Updated On: 24 Nov 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  4. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  6. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  7. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  9. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!