/* */

சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள்

தங்களிடம் உள்ள ஆற்றலை வளர்த்து கொண்டு எதிர்காலத்தில் சிறந்தவர்களாக, வல்லவர்களாக இந்த நாட்டிற்கு பயன்பட வேண்டும்

HIGHLIGHTS

சிறுபான்மையினர் ஆணையம் சார்பில்  மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள்
X

மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  துவக்கி வைத்து பேசினார்.

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் சிறுபாண்மையினர் ஆணையத்தின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் நடத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று துவக்கி வைத்தார்.

போட்டியின் நடுவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும், போட்டிகளில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிய பின்னர் அமைச்சர் ரகுபதி பேசியதாவது;

சிறுபான்மையினர் நலன் காப்பதற்காக மாநில சிறுபான்மை நல ஆணையத்தின் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். திராவிட மாடல் அரசு என்ற இலட்சியத்தை தமிழக கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்க அனைத்து கல்லூரி மாணவர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப்போட்டிகள் நடைபெறுவதற்காக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பேச்சுக் கலை என்பது எண்ணங்களை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மற்றவர்கள் முன்பாக நல்ல வாதமாக எடுத்துவைப்பதற்கு சமமாகும். மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆற்றல் கொண்டிருப்பார்கள். எழுத்தாற்றல், பேச்சாற்றல், இசை, நடனம், ஓவியம் போன்ற பல்வேறு ஆற்றல்களில் ஏதேனும் ஒரு ஆற்றலில் சிறந்தவர்களாக மாணவர்கள் இருப்பார்கள். தங்களிடம் உள்ள ஆற்றலை வளர்த்து கொண்டு எதிர்காலத்தில் சிறந்தவர்களாக, வல்லவர்களாக இந்த நாட்டிற்கு பயன்பட வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார் சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி .

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர் பாஷா, கல்லூரி முதல்வர் முனைவர் பா.புவனேஸ்வரி சிறுபான்மையினர் ஆணைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெனட் அந்தோணிராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

-

Updated On: 29 April 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்