/* */

இனி ஊரடங்கு கடுமையாகும்

புதுக்கோட்டையில் இன்று முதல் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

HIGHLIGHTS

இனி ஊரடங்கு கடுமையாகும்
X

புதுக்கோட்டை உழவர் சந்தையில் 44 தனியார் தொண்டு அமைப்புகளுடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கொரோன தடுப்பு பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்வில் தொண்டு நிறுவனங்களுக்கும் காவல்துறை சார்பில் முகக்கவசம் கிருமிநாசினி மருந்துகள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கூறும் பொழுது, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு காலகட்டத்தில் இதுவரைக்கும் 20 லட்ச ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதியவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நோய் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைய முடியும். எனவே பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதேபோல் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளின் வாகனங்களை அவர்கள் உறவினர்கள் வேறு யாராவது பயன்படுத்தி வெளியே சுற்றினால் அவர்கள் மீது நோய்தொற்று பரப்பும் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த நிகழ்வில் தனியார் தொண்டு நிறுவன அலுவலர்கள் மற்றும் புதுக்கோட்டை நகர டிஎஸ்பி செந்தில் குமார், நகர காவல் ஆய்வாளர் குருநாதன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.

#Instanews #TamilNadu #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #Pudukottai #SP #SevereLockdown #புதுக்கோட்டை #காவல்கண்காணிப்பாளர் #ஊரடங்கு #Severe #lockdown #covid #coronavirus #staysafe #stayhome #quarantine #lockdownlife #quarantinelife #socialdistancing

Updated On: 14 May 2021 7:35 AM GMT

Related News