/* */

பள்ளி மேலாண்மைக் குழு: வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்த விழிப்புணர்வு பிரசாரம்

HIGHLIGHTS

பள்ளி மேலாண்மைக் குழு: வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்
X

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் விழிப்புணர்வு  பிரசார வாகனத்தை கொடியசைத்து வைத்த ஆட்சியர் கவிதாராமு. 

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்த நடமாடும் ஊர்திகள் மூலம் பொதுமக்களுக்கு 2 நாட்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள 'நம் பள்ளி, நம் பெருமை" எனும் 7 பிரசார வாகனங்களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு (27.04.2022) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி வளர்ச்சிக்கு துணை நிற்கவும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 ன் படி பள்ளிமேலாண்மைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மைக் குழுக்களை இரண்டு ஆண்டுகளுக்கு மறுகட்டமைப்பு செய்ய வேண்டும். எனவே பள்ளிமேலாண்மைக் குழு சார்ந்து நடமாடும் ஊர்திகள் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக 7 பிரசார வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழித்தடம் 1 இல் செல்லும் வாகனம் ஏப்ரல் 27, 28 ஆகிய 2 நாட்கள் திருவரங்குளம் ஒன்றியத்தில் கைக்குறிச்சி, வல்லத்திராகோட்டை, எஸ்.குளவாய்பட்டி, வெண்ணாவல்குடி, கொதகோட்டை, கோவிலூர், ஆலங்குடி, திருவரங்குளம், திருக்கட்டளை, கொத்தமங்கலம், எல்.என்.புரம், வடகாடு, மாங்காடு, நெடுவாசல், குளமங்கலம், பனங்குளம், அரையப்பட்டி ஆகிய இடங்களிலும் வழித்தடம் 2 இல் செல்லும் வாகனம் ஏப்ரல் 27 ஆம் தேதி ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் பரமாந்தூர், ஆவுடையார்கோவில், விளனூர், அமரடக்கி, மீமிசல், திருப்புனவாசல், தேயாத்தூர், கரூர், ஒக்கூர், பொய்யாதநல்லூர் ஆகிய இடங்களிலும், மணல் மேல்குடி ஒன்றியத்தில் ஏப்ரல் 28 ஆம் தேதி சந்தைப்பேட்டை, கிருஷ்ணாசிபட்டிணம், கட்டுமாவடி, அம்மாபட்டிணம், கோட்டைப்பட்டிணம், தண்டலை, பொன்னகரம், புதுக்குடி, ராம்நகர் ஆகிய இடங்களிலும் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

வழித்தடம் 3 இல் செல்லும் வாகனம் ஏப்ரல் 27 ஆம் தேதி அறந்தாங்கி ஒன்றியத்தில் எரிச்சி, குன்னகுரும்பி, நாயக்கர் பட்டி, எம்.ஜி.ஆர்.சிலை அருகில், பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, இரயில்நிலையம் சாலை, எல்.என்.புரம், விக்னேஷ்வரபுரம், அக்னி பஜார் ஆகிய இடங்களிலும் அரிமளம் ஒன்றியத்தில் ஏப்ரல் 28 ஆம் தேதி திருவானைக்காவன் பட்டி, கடையக்குடி, மிரட்டுநிலை, ஓணான்குடி, அரிமளம், தாஞ்சூர், கல்லுக்குடியிருப்பு, கே.புதுப்பட்டி, கீழாநிலைக் கோட்டை, ஏம்பல் ஆகிய இடங்களிலும், ஏப்ரல் 27 ஆம் தேதி வழித்தடம் 4 இல் செல்லும் வாகனம் கறம்பக்குடி ஒன்றியத்தில் ரெகுநாதபுரம், மருதான்கோன்விடுதி நால்ரோடு, அம்புக்கோவில், ஊரணிபுரம் பஜார், கறம்பக்குடி பேருந்து நிலையம், கறம்பக்குடி சீனிக்கடை முக்கம், புதுப்பட்டி, சூரக்காடு, வெட்டன்விடுதி, மழையூர் ஆகிய இடங்களிலும், ஏப்ரல் 28 ஆம் தேதி கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் கந்தர்வக்கோட்டை பேருந்துநிலையம், தச்சங்குறிச்சி, கோமாபுரம், புனல்குளம், குளத்தூர் நரயக்கர்பட்டி, பெரியகோட்டை, கல்லாகோட்டை, வெள்ளாளவிடுதி, வேலாடிபட்டி துவார் ஆகிய இடங்களிலும் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

வழித்தடம் 5 இல் செல்லும் வாகனம் ஏப்ரல் 27 ஆம் தேதி குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் கீரனூர் பேருந்து நிலையம், கீரனூர் தேரடிவீதி, உப்பிலியக்குடி பேருந்து நிலையம், குன்றாண்டார்கோவில் பேருந்துநிலையம், ஒடுகம்பட்டி, புலியூர் தொடக்கப்பள்ளி, குளத்தூர் பேருந்து நிலையம், அண்டக்குளம் மேல்நிலைப்பள்ளி, கிள்ளுக்கோட்டை தொடக்கப்பள்ளி, லெக்கணாப்பட்டி தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களிலும் ,விராலிமலை ஒன்றியத்தில் ஏப்ரல் 28 ஆம் தேதி விராலிமலை செக்போஸ்ட், கொடும்பா@ர்சத்திரம், ராஜாளிபட்டி, சூரியூர், மாத்தூர், மண்டையூர், ஆவூர், செவல்பட்டி, அக்கல்நாயக்கன்பட்டி, வடுகபட்டி ஆகிய இடங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

வழித்தடம் 6 இல் செல்லும் வாகனம் ஏப்ரல் 27 ஆம் தேதி அன்னவாசல் ஒன்றியத்தில் அன்னவாசல், இலுப்பூர், மலைக்குடிபட்டி, சத்தியமங்கலம், வயலோகம், பெருமாநாடு, நார்த்தாமலை, பரம்பூர், காவேரிநகர், முக்கணாமலைப்பட்டி ஆகிய இடங்களிலும், ஏப்ரல் 28 ஆம் தேதி பொன்னமராவதி ஒன்றியத்தில் பொன்புதுப்பட்டி, பொன்னமராவதி பேருந்து நிலையம், ஆலவயல், காரையூர், மேலைச்சிவபுரி, மேலத்தானியம், நகரப்பட்டி, நல்லூர், சடையம்பட்டி, வார்ப்பட்டு ஆகிய இடங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

வழித்தடம் 7 இல் செல்லும் வாகனம் ஏப்ரல் 27 ஆம் தேதி புதுக்கோட்டை ஒன்றியத்தில் பாலன்நகர், திருக்கோகர்ணம், திலகர் திடல், இச்சடி, பெருங்களூர், புத்தாம்பூர், முள்@ர், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம்,டி.வி.எஸ்.கார்னர் ஆகிய இடங்களிலும், ஏப்ரல் 28 ஆம் தேதி திருமயம் ஒன்றியத்தில் திருமயம் பேருந்து நிலையம்,காட்டுப்பாவா பேருந்து நிலையம், பி.அழகாபுரி பேருந்து நிலையம், மேலப்பனையூர் பேருந்து நிலையம், பெருந்துறை ஆலமர நிறுத்தம், லெம்பலக்குடி, மணவாளன்கரை பேருந்து நிறுத்தம், குளத்துப்பட்டி பள்ளி,துளையானூர் பள்ளி வளாகம், பேரையூர் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் நடமாடும் ஊர்திகள் மூலம் மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் முறையாக பயன்படுத்தி பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு சார்ந்த தகவல் அனைத்தையும் நூறு சதவீதம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, வருவாய் கோட்டாட்;சியர் அபிநயா, புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மஞ்சுளா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் எஸ்.தங்கமணி, மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதந்திரன், சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர் குரு.மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 27 April 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?