/* */

புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் மரக்கன்று நடவு

மரம் நடுவதை செடி வளர்ப்பதை விளம்பரத்திற்காக செய்வதை தவிர்த்து, வைத்த செடியை பேணி பாதுகாத்து வளர்க்க வேண்டும்

HIGHLIGHTS

மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி மரம் நண்பர்கள் சார்பில் புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி , புதுக்கோட்டை மரம் நண்பர்கள், புதுக்கோட்டை, அரசு கல்வியியல் கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் , கல்லூரி முதல்வர் ஏ நாகராஜன் தலைமையில்25 -க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர் . இந்த நிகழ்வில், மரம் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஜா . எட்வின், பேரா.சா.விஸ்வநாதன், செயலர் பழனியப்பா கண்ணன், இணைச்செயலர் கார்த்திக் மெஸ் மூர்த்தி, உறுப்பினர்கள், மொபைல் ராஜு, பொறியாளர் ரியாஸ்கான், தினேஷ், அப்துல்லா ஆகியோர் பங்கேற்றனர் .

மரக்கன்று நடுவது பற்றி, பேராசிரியர் சா.விஸ்வநாதன் கூறுகையில் மரம் செடிகளை அதிக அளவில் வளர்க்க வேண்டும், ஒரு இயற்கையான சூழ்நிலையை நமது இடத்தில் வைத்து இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் வேண்டும். நம்மால் முடிந்த அளவு நம் வீட்டை சுற்றி உள்ள இடங்களில் மரங்கள் வைப்பதுடன் அதே போல மற்றவர்களையும் மரம் வளர்க்க வலியுறுத்த வேண்டும். தற்போது மரம் நடுவது என்பது அரசியல்வாதிகள் பொதுநலவாதிகள், ஆன்மிகவாதிகள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் செய்யும் காரியம் என்றாகி விட்டது.

மரம் நடுகிறேன் செடி வளர்க்கிறேன் என்று விளம்பரத்திற்காக செய்வதை தவிர்த்து, வைத்த செடியை பேணி பாதுகாத்து வளர்க்க வேண்டும் .நம் ஊரை, நம் இயற்கையை நாம் காப்பற்ற நம்மால் முடிந்த ஒரு சின்ன முயற்சியாக இது அமையும். உங்கள் ஊரின் படித்த நண்பர்கள் நீங்கள் ,சிறு குழுக்கள் மூலம் ஒரு நாள் குறிப்பிட்டு அந்த நாளில் மரம் நடலாம் . மிக முக்கியமான ஒரு விஷயம் மரம் நடுவது மட்டும் குறிக்கோள் அல்ல. அந்த செடி மரம் ஆகும் வரை நாம் காப்பற்ற வேண்டும். மரம் நடுவது என்பது மிகச்சிறந்த செயல். அதில் எந்த சந்தேகமுமில்லை. தற்போது பூமியில் வெப்பத்தின் அளவு அதிகரித்து வரும் வேளையில் இயற்கையின் அருமையை இன்னும் உணராமல் இருப்பது தான் தவறு . இந்திய தேசத்தின் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை யொட்டி புதுக்கோட்டை மரம் நண்பர்கள் மரம் நடுவதில் பெருமையடைகிறோம் என்றார் .

Updated On: 4 Oct 2021 8:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’