/* */

ஆலங்குடி சட்டமன்ற தொகுதியின் தேவைகள்: ஆட்சியருடன் அமைச்சர் மெய்யநாதன் ஆலோசனை

அவசியத் தேவைகள் குறித்து அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பரிந்துரைகளை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்

HIGHLIGHTS

ஆலங்குடி சட்டமன்ற தொகுதியின் தேவைகள்: ஆட்சியருடன் அமைச்சர் மெய்யநாதன் ஆலோசனை
X

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசியத் தேவைகளை நிறைவேற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசியத் தேவைகளை நிறைவேற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா; சிவ.வீ.மெய்யநாதன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில், மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் இன்று (25.10.2022) நடைபெற்றது.

கூட்டத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து தீர்க்கும் வகையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற தனித் துறையை உருவாக்கி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத அவசியத் தேவைகள் குறித்து அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பரிந்துரைகளை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்கள்.

அதன்படி, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற வித்தியாசம் பாராமல், அனைத்துத் தொகுதிகளிலும் உள்ள பொதுமக்களின் நீண்டநாள் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில், சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து தொகுதி வாரியாக கோரிக்கைகள் பெறப்பட்டு, மாவட்ட ஆட்சித்தலைவரின் வழியாக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட வுள்ளது.

இதன்மூலம் பொதுமக்களுக்குத் தேவையான அரசின் திட்டங்கள் விரைவாக சென்றடைவதுடன், படித்த வேலைவாய்ப் பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்கவும், விவசாயி களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய பாசனத் திட்டங்களை உருவாக்கவும், பொதுமக்களின் வசதிக்காக புதிய வருவாய் கோட்டம், வட்டம் மற்றும் பேரூராட்சி, நகராட்சிகளை அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு அமைத்திட உரிய கருத்துருக்களை அரசின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்படி ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசியத் தேவைகளை நிறைவேற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்றையதினம் நடைபெற்றது.

மேலும் முதலமைச்சாின் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் 'மீண்டும் மஞ்சப்பை" திட்டத்தினை செயல்படுத்தியதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது. மேலும் பொதுஇடங்கள், விழாக்கள் போன்ற இடங்களில் சுற்றுச்சூழலை மாசு ஏற்படுத்தும் காரணிகளை முற்றிலும் தவிர;க்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டின் மூலம் அனைத்து உயிர்கள், நீர் நிலைகள் மற்றும் இடங்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தக் கூடியது. எனவே பொதுமக்கள் இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியை அனைத்து வசதிகளுடன் கூடிய தொகுதியாக மாற்ற அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார் இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா; மா.செல்வி, மாவட்ட ஊரக வளா;ச்சி முகமை திட்ட இயக்குநா; ஜி.கருப்பசாமி, மாவட்ட ஆட்சியாpன் நோ;முக உதவியாளா; (பொது) து.தங்கவேல் மற்றும் அலுவலர;கள் பலர; கலந்துகொண்டனர;.

Updated On: 25 Oct 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்