/* */

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதி திறப்பு

பிசி-எம்பிசி நலக் கல்லூரி மாணவ, மாணவி களுக்காக ரூ.12.54 கோடி செலவில் கட்டப் பட்டுள்ள 5 விடுதி திறக்கப்பட்டது

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதி திறப்பு
X

புதுக்கோட்டை மாவட்டம், மருதன்கோன்விடுதியில் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன், 2 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவ, மாணவியருக்காக ரூ.12.54 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5 விடுதிக் கட்டடங்கள் மற்றும் ரூ. 6.52 கோடி செலவில் 2 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் நிறைவுற்ற உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.11.2023) தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 12 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவ, மாணவியருக்கான 5 விடுதிக் கட்டடங்களையும் மற்றும் 2 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் 6 கோடியே 52 இலட்சம் ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு பணிகள் நிறைவுற்ற பள்ளிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளை உயர்த்துவதை சிறப்பு நோக்கமாகக் கொண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1969-ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தையும், 1989-ஆம் ஆண்டு மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்தையும் ஏற்படுத்தினார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அம்மாணவ, மாணவியர் இடைநிற்றல் இன்றி கல்வி கற்றிட கல்வி உதவித் தொகை வழங்குதல், புதிய பள்ளி மற்றும் விடுதிக் கட்டடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை இவ்வரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் சமூகநீதி கொள்கைகளை நிறுவுவதிலும், அதனை செயல்படுத்துவதிலும் தமிழ்நாடு நாட்டிற்கே முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தல், நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையத்தில் 100 மாணவர் தங்கும் வசதியுடன், 2 கோடியே 16 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம்;பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன்,2 கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம்;

புதுக்கோட்டை மாவட்டம், மருதன்கோன்விடுதியில் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன், 2 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம்; திருவாரூர் மாவட்டம், நன்னிலத் தில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், 3 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப் பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம்;தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், 2 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம்;

என மொத்தம் 12 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் நிறைவுற்ற உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை திறந்து வைத்தல்

மதுரை மாவட்டம் - கோவிலாங்குளம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் – தெப்பத்துப்பட்டி ஆகிய இடங்களிலுள்ள 2 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்ட்) நிதி உதவியுடன் 6 கோடியே 51 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் அறிவியல் ஆய்வகங்கள், கூடுதல் கழிப்பறைகள், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் ஆகிய நிறைவுற்ற உட்கட்டமைப்புப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் அணில் மேஷ்ராம், மிகப்பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் வா. சம்பத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Updated On: 29 Nov 2023 4:00 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!