/* */

புதுக்கோட்டை கோ-ஆப்டெக்ஸ் நிலையத்தில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.2.25 கோடி.

அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 86 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளர்களிடம் கொள்முதல் செய்து வருகிறது

HIGHLIGHTS

புதுக்கோட்டை கோ-ஆப்டெக்ஸ்  நிலையத்தில்  தீபாவளி விற்பனை இலக்கு ரூ.2.25 கோடி.
X

புதுக்கோட்டையில் கோஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடக்கி வைத்து பார்வையிட்ட  மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை முக்கனி கோ-ஆப்டெக்ஸ் நிலையத்தில் ரூ.2.25 கோடி தீபாவளி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை புதிய பேருந்துநிலைய வளாகத்தில் அமைந்துள்ள முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத்தள்ளுபடி முதல் விற்பனையை நேற்று துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு மேலும் கூறியதாவது: தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 86 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து, இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு வழங்கும் 30 % சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள் கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், திருபுவனம் பட்டு சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால் மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் மூலம் கடந்த தீபாவளி 2020 பண்டிகை காலத்தில் தஞ்சாவூர் மண்டலத்தில் ரூ.738.50 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. தற்பொழுது தீபாவளி 2021க்கு ரூ.20 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை விற்பனை நிலையத்தில் தீபாவளி 2020ல் ரூ.92.70 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2021க்கு ரூ.2.25 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், 'கனவு நனவு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.இதன்படி, 10 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 11வது மற்றும் 12வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 20%அரசு தள்ளுபடியுடன் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.

இதில், வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ப.அம்சவேணி, நகராட்சி ஆணையர் நாகராஜன், முதுநிலை மேலாளர் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) இரா.சீனிவாசன், துணை மண்டல மேலாளர் (நிர்வாகம்) மு.அன்பழகன், வட்டாட்சியர் செந்தில்குமார், துணை வட்டாட்சியர் கவியரசன், முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் பெ.பாண்டியன், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 16 Oct 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!