/* */

சிறுவன் மீது குண்டு பாய்ந்த சம்பவம் : கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே சிறுவன் மீது குண்டு பாய்ந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சிறுவன் மீது குண்டு பாய்ந்த சம்பவம் : கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
X

மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். 

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே போலீஸ் துப்பாக்கி சுடும் பயிற்சி இயங்கி வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் இன்று காலை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியின்போது அங்கிருந்து வெளியேறிய ஒரு குண்டு, இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நார்த்தாமலை பகுதியில், வீட்டின் முன்பு அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவன் தலையில் பாய்ந்தது. தற்போது, தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் புகழேந்தி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நார்த்தாமலை மற்றும் சுற்றியுள்ள பொதுமக்கள், சிறுவன் தலையில் குண்டு பாய்ந்த சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த சம்பவத்திற்கு விரைந்து வந்த வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Updated On: 30 Dec 2021 11:30 AM GMT

Related News