/* */

புதுக்கோட்டையில் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் மக்கள் குறை கேட்பு முகாம்

பட்டாமாறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 283 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனர்

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் மக்கள் குறை கேட்பு முகாம்
X

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்டத்தில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 283 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.இம்மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், அந்த மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.8,000 மதிப்புடைய மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும் மற்றும் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.13,500 மதிப்புடைய தக்க செயலியுடன் கூடிய திறன் பேசிகளையும் என மொத்தம் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.56,500 மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) திரு.ஆர்.கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 23 May 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...