/* */

அரசு பள்ளிகளை பசுமை பள்ளியாக மாற்றியமைக்கும் திட்டம்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

தமிழகத்தில் நடப்பாண்டில் 25 பள்ளிகளை தேர்வு செய்து பசுமை பள்ளியாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறோம்

HIGHLIGHTS

அரசு பள்ளிகளை பசுமை பள்ளியாக மாற்றியமைக்கும் திட்டம்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்
X

கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள மூன்று அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் 869- பேருக்கு இலவச மிதிவண்டியை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை ஆகியோர் வழங்கினார்கள்,

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை பசுமை பள்ளியாக மாற்றியமைக்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றார் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள மூன்று அரசு பள்ளி மாணவ மாணவியர் 869- பேருக்கு இலவச மிதிவண்டியை தமிழக சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாடு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை ஆகியோர் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியதாவது:தமிழகத்தில் நடப்பாண்டில் 25 பள்ளிகளை தேர்வு செய்து பசுமை பள்ளியாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறோம். இதன் அடிப்படையில் இந்த கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் பள்ளியை முதன் முதலாக தேர்வு செய்யப்படுகிறது. வருகின்ற காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பசுமை பள்ளியாக மாற்றுவதற்கு ஒரு பள்ளி ஒன்றுக்கு ரூ.20 லட்சம் செலவில் இந்த திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்த உள்ளார்.

அதாவது பசுமை பள்ளி என்பது அந்தப் பள்ளியில் முற்றிலுமாக பிளாஸ்டிக் தவிர்ப்பது, சோலார் சிஸ்டம் அமைத்து அந்த பள்ளிக்கு தேவையான மின்சாரம் வழங்குவது, ஆழ்துளை கிணறு அமைத்து அதன் நீர் மூலமாக பள்ளி வளாகங்கள் முழுவதும் பசுமையான நாட்டு மரங்களை வளர்த்து பசுமையாக்குவது ஆகியவைகளை உள்ளடக்கிய இந்த நல்ல திட்டத்தை வருங்காலத்தில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தி காட்டுவோம் என்றார் அமைச்சர் மெய்யநாதன்.

Updated On: 29 Sep 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்