/* */

காவல்துறையை கண்டித்து புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

கண்பார்வையற்ற சங்கர் வீட்டிற்கு வந்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று அடித்து துன்புறுத்தியுள்ளனர்

HIGHLIGHTS

காவல்துறையை கண்டித்து புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
X

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே மாற்றுத் திறனாளி இளைஞர் சங்கரை தாக்கிய காவலர்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

காவல்துறையை கண்டித்து புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அரசு மருத்துவமனை அருகே மாற்றுத் திறனாளி இளைஞர் சங்கர் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார் இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.

காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் மீண்டும் தொலைபேசியில் காவல்துறைக்கு புகார் தெரிவித்தாரம். காவல்துறையினர் அந்த தொலைபேசி நம்பரை கண்டுபிடித்து சங்கர் வீட்டிற்கு வந்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் காயம் அடைந்த மாற்றத்தினால் இளைஞர் சங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

காவல்துறையினர் 3 பேர் மாற்றுத்தினாளி இளைஞர் சங்கரை தாக்கிய சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் மாற்றுத் திறனாளி இளைஞர் சங்கரை தாக்கிய 3 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் மாற்று திறனாளி இளைஞர் சங்கரை தாக்கிய காவலர்களை கண்டித்து புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் 20க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத் திறனாளி இளைஞர் சங்கரை தாக்கிய 3 காவலர்களுக்கும் தகுந்த தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 18 March 2022 7:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...