/* */

வயல்களில் உள்ள மழைநீர் வடியாததால் நெற் பயிர்கள் அழுகும் அபாயம்: விவசாயிகள் வேதனை

பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை உருவாகிவிட்டதால் ஏக்கருக்கு ரூ 20 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

HIGHLIGHTS

வயல்களில் உள்ள மழைநீர் வடியாததால் நெற் பயிர்கள் அழுகும் அபாயம்: விவசாயிகள் வேதனை
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை நின்ற பிறகும் வயல்களில் தேங்கியுள்ள நீர் வடியாததால் பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை உருவாகிவிட்டதால் ஏக்கருக்கு ரூ 20 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர் சாகுபடி ஆய்வு செய்யப்பட்டுள்ளது.தற்போது நடவுப் பயிர்கள் நன்கு விலைய தொடங்கியுள்ள நிலையில் கடந்த 10 நாட்களாக பெய்த கனமழை காரணமாக வயல்களில் நீர் சூழ்ந்தது, இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களை மாவட்ட நிர்வாகம் வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு பணியை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று தினங்களாக மழையானது நின்று வெயில் அடிக்க தொடங்கிய நிலையி,ல் பல பகுதிகளில் இன்னமும் வயல்களில் தேங்கியுள்ள நீர் வடியாமல் இருப்பதால் பயிர்கள் நீரிலேயே அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது மேலும் பல்வேறு பூச்சி தாக்குதல்களும் பயிர்கள் சேதமடைந்து வருகின்றன இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.



குறிப்பாக செல்லுகுடி மேட்டுப்பட்டி பெருஞ்சுனை மற்றும் சிறுஞ்சுனை ஆரியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது தற்போதும் தண்ணீர் வடியாததால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் பயிர்களை காண்பித்து வேதனை தெரிவித்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் சம்பா பயிரிட்டுள்ள 90 சதவீத பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்

மாவட்டத்தில் மழை நின்றும் வயல்களில் தேங்கியுள்ள நீர் வடியயாததால் பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே வேளாண் அதிகாரிகள் பாதிப்புகளை கணக்கெடுப்பு செய்துள்ளனர் அதனடிப்படையில் ஏக்கருக்கு ரூ 20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இழப்பீடு வழங்கினால் மட்டுமே அடுத்த போக சாகுபடிக்கு தங்களால் செல்ல இயலும் என்ற கருத்தையும் முன் வைத்தனர்.

Updated On: 16 Nov 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?