/* */

ஆக.2-ல் மின்கட்டண உயர்வைக் கண்டித்து சிபிஎம் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வருகின்ற ஆகஸ்ட் 2 அன்று பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது

HIGHLIGHTS

ஆக.2-ல் மின்கட்டண உயர்வைக் கண்டித்து சிபிஎம் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்
X

ஆக.2-ல் மின்கட்டண உயர்வைக் கண்டித்து சிபிஎம் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டண உயர்வைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மின்சார வாரிய அலுவலகங்கள் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வருகின்ற ஆகஸ்ட் 2 அன்று பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட குழுக்கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன் தலைமை வகித்தார். மாநிலக்குழு முடிவுகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக மக்கள் விலைவாசி உயர்வினால் ஏற்கனவே கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசை காரணம் காட்டி தமிழக அரசு மின்கட்டண உயர்வை அறவித்திருப்பது எற்புடையது அல்ல. சாதரண மக்கள் மீது சுமத்தப்படும் இத்தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மின்கண்டன உயர்வைக் கண்டித்தும், அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மின்சார வாரிய அலுலவகங்கள் முன்பாக வருகின்ற ஆகஸ்ட் 2-ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அதே போல மத்திய அரசு உணவுப் பொருட்கள் மீது விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை கண்டித்தும், வரிவிதிப்பை திரும்பப்பெற வலியுறுத்தியும் மத்திய அரசு அலுலவகங்கள் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வருகின்ற ஜூலை 29 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு எஸ்.கவிவர்மன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், சி.அன்புமணவாளன், என்.பொன்னி, ஜி.நாகராஜன், த.அன்பழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Updated On: 28 July 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு