/* */

விவசாயிகள் பிஎம்கிஸான் திட்டத்தில் இ-கேஒய்சி செய்வதற்கு நவ.30 கடைசி நாள்

மாவட்டத்தில் பிஎம்கிஸான் திட்டத்தில் தொடர்ந்து தவணைகள் பெறுவதற்கு இ-கேஒய்சி-யின் அவசியம் குறித்து வேளாண்துறை அறிவுறுத்தல்

HIGHLIGHTS

விவசாயிகள் பிஎம்கிஸான் திட்டத்தில் இ-கேஒய்சி செய்வதற்கு நவ.30  கடைசி நாள்
X

பைல் படம்

விவசாயிகள் பிஎம் கிஸான் திட்டத்தில் இ-கேஒய்சி செய்வதற்கு 30.11.2022 கடைசி நாள் என்று வேளாண்துறை அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிஎம் கிஸான் திட்டத்தில் தொடர்ந்து தவணைகள் பெறுவதற்கு இ-கேஒய்சி-யின் அவசியம் குறித்து புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் மா. பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.

பிஎம்கிஸான் திட்டத்தில் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வேளாண் இடு பொருட்களை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசானது ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.2000- வீதம் ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ.6000- வழங்கி வருகிறது.

இதுவரை இந்த திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு 12 தவணைகள் வரப்பெற்றுள்ளது. 13 –வது தவணை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களைக் கொண்டு நவம்பர் 30-ம் தேதிக்குள் இ-கேஒய்சி செய்து கொள்வது அவசியமாகிறது. மேலும் தங்களது வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள வேண்டும். இ-கேஒய்சி ஏற்கெனவே ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள், தங்களது ஆதார் எண் விவரங்களை அருகே உள்ள பொது சேவை மையம் அல்லது தபால் அலுவலகத்தின் தபால் சேவை மூலம் பிஎம் கிஸான் திட்ட வலைதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.

மேலும் இனிவரும் தவணை தொகைகள் அனைத்தும் ஆதார் எண் அடிப்படையில் வழங்கப்படும். எனவே பயனாளிகள் அனைவரும் தங்களது வங்கி கணக்கு உள்ள வங்கி கிளையை அணுகி வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளும்படி புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் மா. பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Updated On: 29 Nov 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...