/* */

தேசிய நுகர்வோர் -உலக நுகர்வோர் உரிமைகள் தினப் போட்டிகள்: வென்றவர்களுக்கு பரிசு

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வழங்கினார்

HIGHLIGHTS

தேசிய நுகர்வோர் -உலக நுகர்வோர் உரிமைகள் தினப் போட்டிகள்: வென்றவர்களுக்கு பரிசு
X

 போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்

தேசிய நுகர்வோர் -உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் மாவட்ட அளவிலான தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா( 2021-2022 ) மாவட்ட ஆட்சித்தலைவர் .கவிதா ராமு தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி முன்னிலையில் புதன்கிழமை (16.03.2022) கொண்டாடப்பட்டது.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒன்பது கல்லூரி மற்றும் மூன்று பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக உரை நிகழ்த்தினர்.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, பொன்னமராவதி மற்றும் கீரனூர் ஆகிய நான்கு பகுதிகளில் இயங்கி வரும் தன்னார்வ நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் து. லதா உத்தமன், சகாயராஜ், அப்துல் ரகுமான், . வேழவேந்தன், ஆர்.யு. ராமன் மற்றும் பி. அய்யணப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக உரை ஆற்றினர். உணவு பாதுகாப்புத் துறை, தொழிலாளர் நலத் துறை, கூட்டுறவுத் துறை, மருந்து கட்டுப்பாடுத் துறை ஆகிய துறைகளை சார்ந்த துறை அலுவலர்கள் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு உரையாற்றினர்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தன்னார்வ நுகர்வோர் அமைப்பை சேர்ந்த பொறுப்பாளர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் செய்தமைக்காக நினைவுப் பரிசு மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, வழங்கினார். கட்டுரை, பேச்சு மற்றும் ஒவியப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 18 மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசுக்கான கேடயங்கள் வழங்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகளின் சார்பில் கவிதை, பேச்சு, ஒவியம் மற்றும் கட்டுரைப் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்ட 90 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தயாரிக்கப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு குறித்த கையேட்டினை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட தன்னார்வ நுகர்வோர் அமைப்பை சேர்ந்த பொறுப்பாளர்கள் பெற்றுக் கொண்டனர்.

தொழிலாளர் நலத் துறை மற்றும் உணவு கட்டுப்பாடு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில் முறையே எடையளவு, உணவுப் பொருள் கலப்படம் குறித்த அரங்குகள் மாவட்ட ஆட்சியரக கீழ் தளத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. கூட்டரங்கின் வாயிலில் மாணவ, மாணவியர்களின் கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் படைப்புகள் பொது மக்கள் பார்வைக்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

முன்னதாக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆர்.கணேசன், வரவேற்றார் நிறைவில் அறந்தாங்கி தனி வாட்டாட்சியர் (கு.பொ.வ) கருப்பையா நன்றி கூறினார். இதில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.பிரவீன்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 March 2022 1:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...