/* */

சைக்கிளில் வந்து தன்னுடைய ஜனநாயக கடமையாற்றிய புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா தன்னுடைய வீட்டிலிருந்து சைக்கிளில் வந்து வாக்களித்தார்

HIGHLIGHTS

சைக்கிளில் வந்து தன்னுடைய ஜனநாயக கடமையாற்றிய புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா
X

புதுக்கோட்டை அன்னச்சத்திரம் பகுதியில் இருந்து தன்னுடைய வாக்கினை பதிவு செய்ய சைக்கிளில் வந்து வாக்கு மையத்தில் வாக்கு பதிவு செய்த புதுக்கோட்டை எம்எல்ஏ  முத்துராஜா

சைக்கிளில் வந்து தன்னுடைய ஜனநாயக கடமையாற்றிய புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா.

தமிழகம் முழுவதும் இன்று நகராட்சி பேரூராட்சி மாநகராட்சி ஆகியவைகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது .அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு நகராட்சி 8 பேரூராட்சிகளுக்கு சனிக்கிழமை தேர்தல் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகளிலும் அதிமுக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் சுயேச்சைகள் என 252 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.புதுக்கோட்டை நகராட்சியில் 120 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், அன்னச் சத்திரம் பகுதியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா தன்னுடைய வாக்கினை பதிவு செய்ய தன்னுடைய வீட்டில் இருந்து வாக்குப்பதிவு மையத்திற்கு சைக்கிளில் வந்து தன்னுடைய வாக்கினை வாக்கு மையத்தில் பதிவு செய்தார்.சென்ற சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய், சைக்கிளில் வந்து தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார் அதேபோல் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா தன்னுடைய வீட்டிலிருந்து சைக்கிளில் வந்து வாக்கு பதிவு செய்தது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது

Updated On: 19 Feb 2022 8:19 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்