/* */

கோயில் தேர் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்களை நலம் விசாரித்த அமைச்சர்

சிறப்பான முறையில் சிகிச்சை அளித்திட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

கோயில் தேர் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்களை நலம் விசாரித்த அமைச்சர்
X

தேர் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் நடைபெற்ற தேர்திருவிழாவில் எதிர்பாராதவிதமாக நேரிட்ட தேர் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணத்தில், 31.07.2022 அன்று நடைபெற்ற தேர்திருவிழாவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தேர் விபத்தில் காயமடைந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று (02.08.2022) நேரில் பார்வையிட்டு, ஆறுதல் கூறினார்.

பின்னர் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணத்தில், 31.07.2022 அன்று நடைபெற்ற தேர் விபத்தில் காயமடைந்த 8 நபர்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அனைத்து நபர்களும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்காணும் விபத்து தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50,000 நிதியும், ஆறுதலும் தெரிவித்திருந்தார்கள். அதன்படி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் நேற்றைய தினம் அனைத்;து நபர்களையும் நேரடியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், ரூ.50,000 க்கான காசோலைகளையும் வழங்கினார்.

அதன்படி, இன்றையதினம் சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பார்வையிட்டு, அனைத்து நபர்களுக்கும் ஆறுதல் தெரிவித்ததுடன், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறியப்பட்டு, சிறப்பான முறையில் சிகிச்சை அளித்திடவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , முன்னாள் அரசு வழக்கறிஞர் திரு.கே.கே.செல்லப்பாண்டியன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பூவதி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 2 Aug 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்