/* */

விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை: ஆட்சியர்

மாவட்டத்தில் நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவ இதுவரை ரூ.7 கோடியே 24 இலட்சம் நிதி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை: ஆட்சியர்
X

புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 807.10 மி.மீ. ஆகும். 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இயல்பான மழையளவான 73.30 மி.மீ-க்கு 80.05 மி.மீ அளவு மழை பெறப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் வரையில் 6.75 மி.மீ கூடுதலாக மழை பதிவாகியுள்ளது.

பயிர்ச் சாகுபடி விவரம் 2022-2023ஆம் ஆண்டில் மார்ச் மாதம் முடிய நெல் 101375 எக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 2156 எக்டர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 4800 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 14374 எக்டர் பரப்பிலும், கரும்பு 2256 எக்டர் பரப்பளவிலும், பருத்தி 452 எக்டர் பரப்பளவிலும் மற்றும் தென்னை 12584 எக்டர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இடுபொருட்கள் இருப்பு மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 31.907 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 36.310 மெ.டன் பயறு விதைகளும், 2.037 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 5.336 மெ.டன் சிறுதானிய விதைகளும், 0,048 மெ.டன் எள் விதைகளும் இருப்பில் உள்ளன. விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களிலிருந்து பெற்றுச் சாகுபடி செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விதை விற்பனை உரிமம் பெற்ற கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை மையங்களிலும் சான்று பெற்ற விதைகள் விநியோகம் செய்திடத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விவசாயிகள் தாங்கள் மேற்கொள்ளும் நெல் சாகுபடியில் சன்ன ரகங்களை அதிக அளவில் சாகுபடி மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நவரை பருவத்திற்கு உகந்த ரகங்களான ஆடுதுறை 45, கோ 51, ஆகியவற்றை தேர்வு செய்து சாகுபடி மேற்கொள்ள திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் -2023 மாதத்திற்குத் தேவையான யூரியா விநியோகத் திட்ட இலக்கின்படி 3550 மெ.டன்களுக்கு, இதுவரை 2347 மெ.டன் யூரியா பெறப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குத் தேவையான டி.ஏ.பி. உரம் விநியோகத் திட்ட இலக்கின்படி 410 மெ.டன்களுக்கு 233 மெ.டன் வரப்பெற்றுள்ளது. காம்ப்ளக்;ஸ் உரங்களைப் பொறுத்தவரை விநியோகத் திட்ட இலக்கான 1700 மெ.டன்களுக்கு இதுவரை 845 மெ.டன் பெறப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது யூரியா 3600 மெ.டன்னும், டிஏபி 1289 மெ.டன்னும், பொட்டாஷ் 405 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் 3822 மெ.டன்னும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கூட்டுறவுச் சங்கத்தில் 418 மெ.டன் யூரியா, 195 மெ.டன் டிஏபி, 199 மெ.டன் பொட்டாஷ், 548 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

டிஏபிக்கு பதிலாக எம்ஏபி மாற்று உரம், மோனோ அமோனியம் பாஸ்பேட் என்ற 11 சதம் தழைச்சத்து 52 சதம் மணிச்சத்துடன் தற்பொழுது விற்பனை செய்யப்படும் எம்ஏபி உரத்தினை டிஏபி-க்கு பதிலாக வாங்கி பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனால் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு தழைச்சத்து உரம் தேவையான அளவு கிடைப்பதோடு மணிச்சத்து அதிகளவில் கிடைப்பதனால் பயிர் வளர்ச்சி சீராகவும், பூச்சிநோய் தாக்குதல் குறைவாகவும், அதிக மகசூல் கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளதால், விவசாயிகள் எம்ஏபி உரத்தினை வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2021-22ஆம் ஆண்டில் 85 பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு 68 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 1102 ஏக்கர் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதால் 1374 விவசாயிகள் பயன்பெறுகிறார்கள். 2021-22ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட 68 தரிசு நிலத் தொகுப்புகளைப் பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டு, 47 தரிசு நில தொகுப்புகளில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

2022-23ஆம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் 120 கிராமப் பஞ்சாயத்துகள் தெரிவு செய்யப்பட்டு, அவற்றில் 79 தரிசு நிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட 79 தரிசு நில தொகுப்பில் 39 தொகுப்புகள் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டு ஒரு தொகுப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. தரிசு நில தொகுப்புகளில் மண்மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின்கீழ் 1,41,290 விவசாயிகள் பதிவு செய்து பயன் பெற்றுவருகின்றனர். இத்திட்டத்தின்கீழ் நேரடி சிட்டா உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000ஃ- வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6000ஃ- மூன்று தவணைகளாக ஏப்ரல் - செப்டம்பர், ஆக்ஸ்ட்- நவம்பர் மற்றும் டிசம்பர் - மார்ச் மாதங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் தங்களது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைத்து DBT Mode -ற்கு மாற்றிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும்; விவசாயிகள் விரைந்து e-KYC-apid-யினை 30.04.2023 ஆம் தேதிக்குள் சரிபார்த்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதன் பொருட்டு வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பிரதம மந்திரியின் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி கூடுதல் பரப்பில் சாகுபடி செய்திடும் பொருட்டு வேளாண் பயிர்களான கரும்பு, மக்காச்சோளம், எண்ணெய்ப் பனை மற்றும் தென்னை மரங்களுக்குச் சொட்டுநீர்ப் பாசனமும், பயறு வகைப் பயிர்கள் மற்றும் நிலக்கடலைப் பயிர்களுக்குத் தெளிப்புநீர்ப் பாசனம், மற்றும் மழைத்தூவான் பாசனக் கருவிகளும் சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன.

2022-23ஆம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 1100 எக்டர் இலக்கீடு வழங்கப்பட்டு இதுவரை 2716 பயனாளிகளுக்கு 2988 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை ரூ.7 கோடியே 24 இலட்சம்;; நிதி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உளுந்து பயிர் தனிப் பயிராகவும், மானாவாரி பயிராகவும், சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் நெல் சாகுபடிக்கு பின்னர் நெல் தரிசில் உளுந்து சாகுபடியும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்;டம் செயல்படுத்தப்படும் பஞ்சாயத்துகளில் தென்னை மரங்களை தாக்கும் தென்னை வாடல் நோயினை கட்டுப்படுத்திட டிரைக்கோடெர்மா விரிடி எனும் பூஞ்சான வகை உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் எக்டருக்கு 4 கிலோ, தென்னை மரங்களை தாக்கும் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்திட மெட்டிரைசியம் அனிசோபிலோ என்ற உயிரியில் காரணிகள் எக்டருக்கு 4 கிலோ ஆகியன விவசாயிகளுக்கு 50 சத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 120 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு 72,000 தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

உழவன் செயலி மூலம் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் உரம் இருப்பு விவரம், மானியத் திட்டங்கள், மானிய முன்பதிவு, உதவி வேளாண்மை அலுவலர் வருகை குறித்த தகவல், வானிலைச் செய்திகள், பயிர்க் காப்பீட்டு விவரங்கள் உள்ளிட்ட 21 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.எனவே தமிழக அரசின் இதுபோன்ற வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) திருமதி.ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.நா.கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் திரு.பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.கோ.இராஜேந்திர பிரசாத் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்

Updated On: 29 April 2023 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்