/* */

புதுக்கோட்டையில் சர்வதேச செஸ் போட்டி தொடக்கம்

புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரியில் சாய் சரவணா அகாடெமி நடத்தும் 2 வது சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டி தொடங்கியது

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் சர்வதேச செஸ் போட்டி தொடக்கம்
X

போட்டியை திமுக மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் அண்ணாமலை ரகுபதி தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை செந்தூரான் பொறியியல் கல்லூரியில் சாய் சரவணா அகாடெமி நடத்தும் இரண்டாவது சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை சாய் சரவணா அகாடெமி நடத்தும் இரண்டாவது சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டி புதுக்கோட்டை லெணா விலக்கில் உள்ள செந்தூரான் பொறியியல் கல்லூரியில் தொடங்கியது.

இப்போட்டியின் தொடக்க விழாவில், புதுக்கோட்டை மாவட்ட செஸ் சங்கத்தலைவர் தொழிலதிபர் எஸ். .ராமசந்திரன் தலைமை வகித்தார். செயலர் பேராசிரியர் கணேசன் அனைவரையும் வரவேற்றார்.

போட்டியை திமுக மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் அண்ணாமலை ரகுபதி தொடங்கி வைத்தார். செந்தூரான் கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள் எஸ். செல்வராஜ், ராம. வயிரவன், கார்த்திக், சாய் சரவணா அகாடமி நிறுவனர்கள் அங்கப்பன் மற்றும்.அடைக்கலவன், சர்வதேச செஸ் நடுவர்கள் தினகரன், ஆனந்தபாபு முன்னிலை வகித்தனர்.

மேலும், இந்நிகழ்வில் பாலு, சிவா, சையது மற்றும் புதுக்கோட்டை மாவட்ட செஸ் சங்க பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். புதுச்சேரி உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களி லிருந்தும் 400 -க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கலந்து கொண்டனர் . இன்று (மே 29) தொடங்கிய இப்போட்டி ஐந்து நாட்கள் நடை பெறுகிறது.

Updated On: 30 May 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்