/* */

பொங்கல் பண்டிகைக்கு அரசால் அறிவிக்கப்பட்ட தொகுப்பு பைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

மாவட்டத்தை பொருத்தவரை 4, 82,109 ரேஷன் கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பை பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவர்

HIGHLIGHTS

பொங்கல் பண்டிகைக்கு அரசால் அறிவிக்கப்பட்ட தொகுப்பு  பைகள் தயாரிக்கும் பணி  தீவிரம்
X

 பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு பொருட்கள் பேக்கிங் செய்யும் பணி மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது

தமிழக அரசால் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட வேண்டிய பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு பொருட்கள் பேக்கிங் செய்யும் பணி மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு அரசு வாங்கும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வெல்லம் அரிசி கோதுமை மாவு| உப்பு, புளி, மிளகு, நெய், முந்திரி பருப்பு, ஏலக்காய், உலர் திராட்சை உள்ளிட்ட 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது

அதன்படி பொதுமக்களுக்கு வரும் ஜனவரி 3ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை 4 லட்சத்து 82 ஆயிரத்து 109 ரேஷன் கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பை பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவார்கள்

இந்நிலையில், அரிசி வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் தற்போது புதுக்கோட்டையிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிளையில் பேக்கிங் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பேக்கிங் செய்யப்பட்டு உடனடியாக அவைகள் லாரிகள் மூலமாக ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

Updated On: 31 Dec 2021 9:20 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  3. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  5. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  6. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  7. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  8. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  9. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  10. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...