/* */

வீடு இல்லாத ஏழைகள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

புதுக்கோட்டை நரிமேடு திட்டப்பகுதியில் 1920 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

வீடு இல்லாத ஏழைகள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்
X

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடு இல்லாத ஏழைகள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க விண்ணப்பிக்கலாம் எனமாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தகவல் தெரிவித்துள்ளார்.

-தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி கோட்டம், புதுக்கோட்டை, நரிமேடு திட்டப்பகுதியில் 1920 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இந்த குடியிருப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகளிடமிருந்து பயனாளிகள் முழு பங்களிப்புத் தொகையை செலுத்தியவர்களுக்கு குலுக்கல் மூலம் குடியிருப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஆனால் பயனாளிகள் முழு பங்களிப்புத் தொகையினை செலுத்தாமல் குடியிருப்புகள் வேண்டாம் என்று சம்மதக் கடிதம் அளித்துள்ள பயனாளிகளை நீக்கம் செய்து மாற்று பயனாளிகளை தேர்வு செய்ய நகர்ப்புறங்களில் வசிக்கும் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள சொந்த நிலம் மற்றும் வீடற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்கள் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் உதவி பொறியாளர் மற்றும் உதவி நிர்வாகப்பொறியாளர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், புதுக்கோட்டை அலுவலகம் (கவிநாடு மேற்கு திட்டப்பகுதி மவுண்ட் சீயோன் பள்ளி செல்லும் வழி, இரயில்வே நிலையம் அருகில்) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.தகுதியான பயனாளிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய பயனாளிகள் பங்களிப்புத் தொகையாக ரூ.95,500 – செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் உதவிப்பொறியாளர் அலைபேசி 9790382387, தொழில்நுட்ப உதவியாளர்கள் அலைபேசி 9159500840, 8973026147 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்

Updated On: 29 March 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...