/* */

தமிழக ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார்

மத்தியஅரசின் கூட்டங்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை கலந்து கொள்ள வேண்டும் என்ற கருத்து கண்டிக்கத்தக்கது

HIGHLIGHTS

தமிழக ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார்
X

புதுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்த போது

மத்திய அரசு கூட்டங்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை கலந்து கொள்ள வேண்டும் என்ற கருத்து கண்டிக்கத்தக்கது எனறார் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்.

புதுக்கோட்டையில் இனறு செய்தியாளர்களிடம் மேலும் அவர் பேசியதாவது: தமிழகத்தில் அதிக அளவு பெய்த பருவமழை காரணமாக அதிக அளிவில் பயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. சேதத்தை தமிழக அமைச்சர்கள் மட்டுமல்லாது மத்திய குழுவும் ஆய்வு செய்துள்ளது. ஆனால் அந்த குழு என்ன அறிக்கை அளித்துள்ளது என்று இதுவரை வெளியிடப்படவில்லை. மத்திய அரசும் எந்த நிதியையும் ஒதுக்கவில்லை.

தமிழக அரசு எக்டருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் அரசாணை எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நிவாரணம் வழங்கவில்லை.இது ஒருபுறமிருக்க ,தமிழக அரசு அறிவித்த இழப்பீடு தொகை என்பது விவசாயிகளுக்கு குறைவானதாக இருக்கும் ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதேபோல் இறந்து போன கால்நடைகள் மட்டுமல்லாது இடிந்த குடிசை வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லை. உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்

தோழமை கட்சியாக இருந்தாலும் தமிழக அரசு தவறு செய்தால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்துகிறது. கூட்டணியை முறித்துக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை.தமிழக ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார்.பாஜக ஆளும் மாநிலங்களில் தவிர மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுக்கு எதிராக ஆளுநர்கள் செயல்பட்டு வருகின்றனர். இது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல.

தமிழகத்தில் ஒப்பந்தங்களில் 60 சதவீதம் கமிஷனாக பெறுவதால் தான் 40 சதவீத பணிகள் தான் நடைபெற்று வருகிறது. அதுவும் பணிகள் நடப்பதற்கு முன்பாகவே கமிஷன் தொகையை முன்கூட்டியே வாங்கப்படுகிறது. இது எல்லா ஆட்சிகளிலும் தொடர்கிறது. மத்திய அரசு கூட்டங்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை கலந்து கொள்ள வேண்டும் என்ற கருத்து கண்டிக்கத்தக்கது.

தன்னிச்சையாக செயல்படக் கூடிய தேர்தல் ஆணையம், தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் மறைமுகமாக கொண்டு வரப்பட்டு விட்டது.தமிழகத்தில் தொலைநோக்குத் திட்டம் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை வரும் கூட்டத்தொடரில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் இரா. முத்தரசன். இதில் மாவட்டசெயலர் மு. மாதவன், நிர்வாகி கே.ஆர். தர்மராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 18 Dec 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  6. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!