/* */

குடும்ப தலைவர்களின் ஆதிக்கம் இல்லாமல் பெண் தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்

தமிழகத்திலேயே முதன் முதலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் மாணவிகளின் பாதுகாப்புக்காக அரண் என்ற இயக்கம் தொடங்க பட்டுள்ளது

HIGHLIGHTS

குடும்ப தலைவர்களின் ஆதிக்கம் இல்லாமல் பெண் தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்
X

 புதுக்கோட்டையிவ் நடைபெற்ற மகளிர் தின விழாவில்  பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு 

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் தலைவர்கள் மற்றும் பெண் கவுன்சிலர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், குடும்ப தலைவர்களின் ஆதிக்கம் இல்லாமல் பெண் தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். மகளிர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பேச்சு.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தியும் அவர்களுக்கு ஏற்படும் பல்வேறு விதமான பிரச்சனைகள் பாலியல் தொந்தரவுகள் ஆகியவற்றை தீர்ப்பதற்கும் தைரியமாக அவர்கள் பிரச்சினைகளை கூறுவதற்கும் அரண் என்ற இயக்கம் மாவட்ட நிர்வாகத்தால் தொடங்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் இந்த இயக்கம் நடைபெற்று வருகிறது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 1907 பள்ளிகள் மற்றும் இருபத்தி ஒரு கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு அனைத்து பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. இதில் 3 லட்சத்து 42 ஆயிரத்து 340 மாணவ மாணவிகள் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

புதுக்கோட்டை தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் உறுதி மொழியை வாசித்தார். மாணவிகள் கைகளை உயர்த்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு செய்தியாளர்களிடம் மேலும் பேசியதாவது: தமிழகத்திலேயே முதன் முதலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் மாணவிகளின் பாதுகாப்புக்காக அரண் என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் இந்த உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மகளிர் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் அதற்காகத்தான் நகர்புற ஊரக அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.அதன்படி தேர்தல்களில் போட்டியிட்டு 50 சதவீத பெண் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டு அதனை வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பல பகுதிகளில் பெண் தலைவர்கள் மற்றும் அவர்களின் கணவர்கள் சகோதரர்கள் மற்றும் அவர் குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்துவதை நாம் பார்க்க முடிகிறது. ஆனால் பெண் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் குடும்பத்தினரின் ஆதிக்கம் இல்லாமல் அரசியலிலும் அவர்கள் சாதிக்க முடியும் என்று வெளிப்படுத்தும் விதமாக தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு அதனை வெளிப்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு..

Updated On: 8 March 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்