/* */

மத்தியஅரசின் அணைகள் பாதுகாப்பு சட்டம் மாநில சுயாட்சிக்கு எதிரானது: திமுக எம்பி

நெகிழிப் பைகளை ஒழிக்க அரசு எத்தனை சட்டங்கள் போட்டாலும் மக்கள் உணர்ந்தால் மட்டுமே முழுமையாக ஒழிக்க முடியும் என்றார்

HIGHLIGHTS

மத்தியஅரசின் அணைகள் பாதுகாப்பு சட்டம் மாநில சுயாட்சிக்கு எதிரானது: திமுக எம்பி
X

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இடத்தில் விளையாட்டு வீரர்களுக்கு மஞ்சப்பை யை வழங்கிய மாநிலங்களவை எம்பி எம்எம் அப்துல்லா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா

மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு சட்டம் மாநில சுயாட்சிக்கு எதிரானது என்றார் மாநிலங்களவை திமுக எம்பி அப்துல்லா.

தமிழகத்தில் நெகிழிப் பையைத் ஒலிக்கும் விதத்தில் தமிழக அரசு மஞ்சப்பை இயக்கம் என ஒரு திட்டத்தை அறிவித்து தமிழக முதலமைச்சர் மஞ்சப்பை திட்டத்தை இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையில் துவக்கி வைத்தார்.

மேலும், தமிழகம் முழுவதும் நெகிழி பையை ஒழிக்க விதத்தில் அனைவரும் துணிப்பையை மற்றும் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது.இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தமிழகம் முழுவதும் நெகிழிப்பை ஒழிப்பை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, இன்று புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நெகிழிப்பை ஒழிப்பு மேலும் மஞ்சப்பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் நடை பயிற்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு மாநிலங்களவை திமுக எம்பி அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா மற்றும் நடைபயிற்சி சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மஞ்சள் பையை வழங்கி நெகிழிப்பை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பின்னர் மாநிலங்களவை எம்பி அப்துல்லா செய்தியாளர்களிடம் மேலும் பேசியதாவது: ஒன்றிய அரசின் அணைகள் பாதுகாப்பு சட்டம் மாநில சுயாட்சிக்கு எதிரானது, ஒன்றிய அரசு என்பது மாநிலங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளித்து அதை கண்காணிக்க மட்டுமே செய்வதாக இருக்க வேண்டும், தானே அனைத்தையும் கையில் எடுத்துக் கொண்டு நிறைவேற்றினால், ஆங்கிலேயர் ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சி க்கும் என்ன வித்தியாசம். இந்த செயல் மாநில உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானது.நெகிழிப் பைகளை ஒழிக்க அரசு நினைத்து சட்டங்கள் எல்லாம் போட்டாலும் கூட மக்கள் உணர்ந்தால் மட்டுமே நெகிழியை முழுமையாக ஒழிக்க முடியும் என்றார் அவர்.


Updated On: 31 Dec 2021 3:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்