/* */

நீர்நிலைகள் உள்பட அனைத்து வகையான புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

மாவட்டத்தில் நீர்நிலைகள் உள்பட அனைத்து வகையான புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: ஆட்சியர் கவிதாராமு அறிவுறுத்தல்

HIGHLIGHTS

நீர்நிலைகள் உள்பட அனைத்து வகையான புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
X

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்நிலைப் புறம்போக்கு நிலங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு புறம்போக்கு நிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளையும் தாமாகவே முன்வந்து அகற்றி கொள்ள வேண்டுமென ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு அறிவுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கீரமங்கலம் சரகம், சேந்தன்குடி, நகரம் மற்றும் கீரமங்கலம் வடக்கு கிராமம் புல எண்கள். 132, 58 மற்றும் 166 ஆகியவற்றின் விஸ்தீரணங்கள் முறையே 18.60.5 ஹெக்டேர், 22.54.5 ஹெக்டேர் மற்றும் 11.87.5 ஹெக்டேர் ஆக மொத்தம் 53.02.5 ஹெக்டேர் 'அ.புறம்போக்கு – பெரியாத்தாள் ஊரணி" என வகைபாடு செய்யப்பட்டுள்ள நிலத்தில் கடலை, மலர், தென்னை உள்ளிட்ட பயிர் சாகுபடி மூலமாக பல்வேறு நபர்கள் 24 ஹெக்டேர் பரப்பு நீர்நிலை புறம்போக்குகளில் ஆக்கிரமித்து செய்து வந்தனர்.

நீர்நிலை புறம்போக்குகளில் ஆக்கிரமணம் அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் அறிவுரைப்படி, மேற்கண்ட ஆக்கிரமிப்புகள் கடந்த 24.03.2022 மற்றும் 26.03.2022 ஆகிய இரு நாள்களில் 5 ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் புதுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில், ஆலங்குடி நீர்வளத்துறை பாசனப்பிரிவு உதவி பொறியாளர், ஆலங்குடி வட்டாட்சியர் மற்றும் கீரமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் 24 ஹெக்டேர் பரப்பளவிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டன.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்நிலைப் புறம்போக்கு நிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமணங்கள் அனைத்தும் எவ்வித தயவு தாட்சயமின்றி அகற்றப்படும் எனவும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை தடை செய்யும் நபர்கள் மீது சட்டபடியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைப் புறம்போக்கு நிலங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு புறம்போக்கு நிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்றி கொள்ள வேண்டும். இதிவ் தவறும் பட்சத்தில் ஆக்கிரமிப்புகளை அரசு சார்பில் அகற்றி, அதற்குரிய செலவினங்கள் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 29 March 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...