/* */

டாக்டர் முத்துலட்சுமியின் 138 ஆவது பிறந்தநாள்: அரசு சார்பில் மரியாதை

டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் அவர்கள் 30.07.1886 அன்று பிறந்தார். அவரது 138-வது பிறந்த நாள் அரசு சார்பில் கொண்டாடப்பட்டது

HIGHLIGHTS

டாக்டர் முத்துலட்சுமியின்   138 ஆவது பிறந்தநாள்: அரசு சார்பில் மரியாதை
X

நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமியின்  பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மரியாதை செய்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா. உடன் எம்எல்ஏ முத்துராஜா

டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் 138-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் 138-வது பிறந்தநாளினை முன்னிட்டு, அவரது உருவச் சிலைக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (30.07.2023) மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, அங்குள்ள பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: 2021-2022 ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக்கோரிக்கையில் இந்தியாவின் முதல் பெண் சட்டப்பேரவை உறுப்பினர், இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர், தமிழ்நாட்டின் சமூக சீர்த்திருத்த பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி அம்மையாருக்கு புதுக்கோட்டையில் திருவுருவச்சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், நிறுவப்பட்ட தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தப் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் அவர்களின் திருவுருவச் சிலையினை 10.05.2023 அன்று காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்கள் 30.07.1886 அன்று பிறந்தார். அவரது 138-வது பிறந்த நாளினை கொண்டாடும் வகையில் இன்றையதினம் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, அரசு மருத்தவக்கல்லூரி முதல்வர் (பொ) மரு.ஜி.ஏ.ராஜ்மோகன், வருவாய் கோட்டாட்சியர்முருகேசன், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்றத் துணைத்தலைவர் லியாகத்அலி, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருக்கை மருத்துவர் மரு.இந்திராணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், வட்டாட்சியர் விஜயலட்சுமி, உதவிப்பொறியாளர்கள் (பொ.ப.து.) எம்.பாஸ்கர், ரவிச்சந்திரன், ஊராட்சிமன்றத் தலைவர் ஆதீஸ்வரன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 30 July 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  4. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  5. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  6. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
  8. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  9. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...