/* */

நீர்நிலைகளுக்கு பத்திரப்பதிவு செய்யக்கூடாது: விவசாயிகள் சங்கத்தலைவர் வரவேற்பு

நீர் நிலைகளில் உள்ள இடங்களுக்கு பத்திரப்பதிவு செய்யக்கூடாது எனும் உயர்நீதிமன்றம் தீர்ப்பை வரவேற்பதாக விவசாயிகள் கூறினர்

HIGHLIGHTS

நீர்நிலைகளுக்கு பத்திரப்பதிவு செய்யக்கூடாது:  விவசாயிகள் சங்கத்தலைவர்  வரவேற்பு
X

புதுக்கோட்டை அறிவியல் இயக்க கூட்ட அரங்கில் நடைபெற்ற தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க கூட்டத்தில் மாநில தலைவர் பூ. விஸ்வநாதன் பேசினார்

நீர்நிலைகளில் உள்ள இடங்களுக்கு பத்திரப்பதிவு செய்யக்கூடாது உயர்நீதிமன்றம் தீர்ப்பை வரவேற்பதாக தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் பூ. விஸ்வநாதன் கூறினார்.

புதுக்கோட்டை அறிவியல் இயக்க கூட்டரங்கில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கறம்பக்குடி ஒன்றிய அமைப்பாளர் மணி வரவேற்புரையாற்றினார். விராலிமலை ஒன்றிய அமைப்பாளர் பூபாலன் முன்னிலை வகித்தார். விராலிமலை ஒன்றிய அமைப்பாளர் பூபாலன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் இளையராஜா, வீரக்குமார், முத்துக்குமார், மதியழகன், புஷ்பராஜ், ரவிச்சந்திரன், தங்கதுரை, உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கலந்து கொண்டனர்.

பின்னர் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ. விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: சென்னை உயர்நீதிமன்றம் நீர்நிலைகளில் அருகே உள்ள இடங்களுக்கு பத்திர பதிவு செய்யக் கூடாது என இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது இதனை தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தின் சார்பில் வரவேற்பு தெரிவிக்கிறோம். மேலும் நீர்நிலைகளில் உள்ள இடங்களை பட்டா மாறுதல் செய்ய கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பை, மாவட்ட நிர்வாகம் கடைபிடித்து நீர்நிலைகள் அருகே உள்ள இடங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது .

மேலும் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது. பிரதமர் மோடியை தமிழக முதல்வரை சந்தித்து பேச வேண்டும். காவிரி அக்னியாறு தெற்கு வெள்ளாறு வரை காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை காலதாமதம் இல்லாமல் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். அக்னி ஆற்றிலும் தெற்கு வெள்ளாற்றிலும் அதிக இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் மழை பெய்தும் தண்ணீர் இல்லாத ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Updated On: 27 Jan 2022 6:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  2. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  3. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  4. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  5. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  6. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  7. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  8. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்