/* */

செல்போனில் வீடியோ எடுக்கும்போது விபரீதம்: பாறை குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

செல்போனில் வீடியோ எடுக்க ஆசைப்பட்டு பாறை குளத்தில் மூழ்கி இறந்த சிறுவனின் உடல் 8 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்பு

HIGHLIGHTS

செல்போனில் வீடியோ எடுக்கும்போது விபரீதம்: பாறை குளத்தில் மூழ்கி  சிறுவன் பலி
X

செல்போனில் வீடியோ எடுக்க ஆசைப்பட்டு பாறை குளத்தில் மூழ்கி இறந்த சிறுவனின் உடல் 8 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்பு.

செல்போனில் வீடியோ எடுக்க ஆசைப்பட்டு பாறை குளத்தில் மூழ்கி இறந்த சிறுவனின் உடல் 8 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட கோவில்பட்டி நரிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாறை குளங்கள் அதிகமாக இருக்கிறது. மழைக்காலங்களில் அதிக அளவில் மழைநீர் தேங்குவதால் கடல்போல் காட்சியளிக்கும் மேலும் இந்த குளத்தில் சிறுவர்கள் முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் வரை வருடத்திற்கு 10 க்கும் மேற்பட்டோர் பாறை குளத்தில் மூழ்கி இறந்து போகும் நிலை தொடர்கதையாகி வருகிறது.

மேலும் சிறுவர்கள் பாறை குளத்தில் இருந்து குதித்து செல்பி எடுத்துக் கொண்டு குளிக்கும் சூழ்நிலையில் ஒரு சிலர் பாறை குளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்.இந்த நிலையில் நேற்று இரவு புதுக்கோட்டை புதுத்தெரு அருகே உள்ள பாறை குளத்தில் ஐந்துக்கு மேற்பட்ட சிறுவர்கள் பாறை குளத்தில் குளித்துள்ளனர்.

இதில் அக்கச்சியாவயல் செல்வராஜ் மகன் பிரகதீஸ்வரர் என்பவர் தனது நண்பர்களுடன்பாறை குளத்தில் நேற்று இரவு குளிக்க சென்றுள்ளார்.மேலும் தனது நண்பர்கள் மூலம் பாறை குளத்தின் குளிப்பது போல் வீடியோ எடுக்கச் சொல்லி ஒருவர் பின் ஒருவராக பாறை குளத்தில் குதித்து குளித்துள்ளனர்.

செல்போனில் ஸ்டேட்டஸ் வைப்பதற்காக ஒருவர் பின் ஒருவராக பார்வை குளத்தில் குளிக்கும் பொழுது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார்.அப்பொழுது பிரகதீஸ்வரர் அவருடைய நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக பாறை குளத்தில் குதித்து குளித்துள்ளனர். இந்நிலையில், பிரகதீஸ்வர் பாறை குளத்தில் குளித்த போது அதிக அளவில் ஆழம் இருந்ததால் குளத்தின் உள்ளே சென்று பாறையின் அடியில் சிக்கிக் கொண்டார்.

குளத்தில் குதித்த பிரகதீஸ்வரர் மேலே வராததால் உடனடியாக அருகில் இருந்த அவருக்கு அவருடைய நண்பர்கள் தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து காரை குளத்திற்கு வந்த உறவினர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் நேற்று இரவு 3 மணி நேரம் குளத்தின் தேடியும் கிடைக்காத நிலையில் இன்று காலை 6 மணி முதல் 12 மணி வரை 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாறை குளத்தில் இருந்து பிரகதீஸ்வர் உடல் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து திருக்கோகர்ணம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.செல்போனில் வீடியோ எடுக்க ஆசைப்பட்டு 18 வயதான சிறுவன் பாறை குளத்தில் மூழ்கி இறந்து போன சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Updated On: 25 April 2022 8:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’