/* */

மேகதாது அணை விவகாரத்தில் கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் : சிபிஎம் வேண்டுகோள்

மேகதாது அணை விவகாரத்தில் கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைய வேண்டும் என்று சிபிஎம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

HIGHLIGHTS

மேகதாது அணை விவகாரத்தில் கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் : சிபிஎம் வேண்டுகோள்
X

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டியளித்தார்.

மேகதாது அணை விவகாரம் பாஜக அரசியல் லாபம் தேடுவதாக சிபிஎம் குற்றச்சாட்டு.

புதுக்கோட்டை மாவட்ட சிபிஎம் கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிபிஎம் கட்சியின் மாவட்ட செயலாளர் கவி பெருமாள் தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை ஒன்றிய செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் பாஜக தற்போது புது பிரச்சினையை கிளப்பியுள்ளது. தமிழகத்தை இரு கூறுகளாகப் பிரித்து கொங்குநாடு என்று யூனியன் பிரதேசமாக அறிவிப்பதற்கு பாஜக முயற்சி செய்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தான் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவியும், அண்ணாமலைக்கு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் பதவியும் கொடுக்கப்பட்டதாகவும் பேசப்படுகிறது.

இது மிகவும் ஆபத்தான போக்கு பாஜகவின் இத்தகைய முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழ் மொழி அடிப்படையில் உருவான நாட்டை பிரிப்பதற்கு தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.இது ஆபத்தான திசையை நோக்கி இந்தியாவை பயணிக்க வைக்கும் என்பதை தெரியப்படுத்த விரும்புகிறேன்.

மேகதாது அணை விவகாரத்தில் பாஜக அரசாங்கம் எதற்கு இவ்வளவு பூதாகரமாக பிரச்சனைகளை கிளப்புகிறது என்பதை பார்க்க வேண்டும். தமிழகத்தில் பாஜக உட்பட அனைத்துக் கட்சிகளும் மேகதாது அணை விவகாரத்தில் ஒத்த கருத்தோடு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

தமிழக அரசு 2-ஆவது அலை கொரோனா தாக்கத்தை சிறப்பாக கையாண்டு உள்ளது பாராட்டுக்குரியது. தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 40 ரூபாய் இடைத்தரகர்கள் வாங்குவது என்பது கடந்த ஆட்சியில் தொடர்ந்தது இந்த ஆட்சியிலும் தொடர்கிறது. உடனடியாக தமிழக முதல்வர் கவனம் செலுத்தி இடைத்தரகர்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதில் தவறில்லை. அதற்காக கொங்குநாடு முழக்கம் என்பது மிகவும் ஆபத்தான செயல். அதற்கும் இதற்கும் ஒப்பிட முடியாது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு அதிகப்படியாக வருவதற்கு காரணம் மத்திய அரசுதான். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது போன்று படிப்படியாக அனைத்தையும் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. முன்னாள் அமைச்சர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் எந்த பாரபட்சமும் காட்டக்கூடாது என்றார்.

Updated On: 10 July 2021 11:04 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  2. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  3. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  4. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  6. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  8. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  9. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  10. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...