/* */

அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு சிபிஎம் மரியாதை

அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் புதுக்கோட்டையில் உள்ள உருவச்சிலைக்கு மரியாதை செய்தனர்

HIGHLIGHTS

அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு சிபிஎம் மரியாதை
X

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்த கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து செவ்வாய் கிழமையன்று மரியாதை செய்யப்பட்டது.

கந்தர்வகோட்டையில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், எஸ்.சங்கர, ஒன்றிய செயலாளர்கள் வி.ரத்தினவேல், ஜி.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

புதுக்கோட்டையில் கட்சியின் மூத்த தலைவர் பெரி.குமாரவேல் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், ஜி.நாகராஜன், சு.மதியழகன், துரை.நாராயணன் எஸ்.ஜனார்த்தனன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி. ஜீவானந்தம், சிபிஎம் நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.சுசீலா, சி.மாரிக்கண்ணு, எஸ்.பாண்டிச்செல்வி உள்ளிட்டோர் அண்ணலுக்கு புகழ் அஞ்சலி செய்தனர்.

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கல்.

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் அண்ணல் அம்பேத்காரின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு சங்கத்தின் காந்திநகர் கிளை தலைவர் இதயம் முரளி தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகி எம்.ஏ.ரகுமான் அம்பேத்கரின் சிறப்புகள் குறித்து பேசினார்.கிளை செயலாளர் ராஜ்கமல், பொருளாளர் மணிமாறன், அறிவழகன், பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அம்பேத்கர் பற்றி சில துளிகள்...மராட்டிய மாநிலத்தில் உள்ள கொங்கன் மாவட்டம் அம்பவாடே என்னும் சிற்றூரில் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் பிறந்தார். இவரது பெற்றோர் தந்தை இராம்ஜி சக்பால், தாயார் பீமாபாய் ஆவர். கொங்கண் மாவட்டத்தில் உள்ள தபேலியில் அம்பேத்கார் தம் ஆரம்ப கல்வியை கற்றார். 1908 இல் எல்பின்ஸ்டன் பள்ளியில் உயர்நிலைப் படிப்பை முடித்தார். 1912 – இல் பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கொலம்பியா பல்கலைக் கழகத்தில் 1915-இல் முதுகலைப் பட்டம் பெற்றார்.1916- இல் லண்டனில் பொருளாதாரத்தில் ஆய்வுப் பட்டமும், அறிவியல் முதுகலைப்பட்டமும் பெற்றார். பிறகு பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.

இந்தியா சுதந்திர நாடானதும் இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் தேவை என உணர்ந்து அதனை வகுக்க ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் உள்ள பலரும் செயல்படாமல் விலகினர்.எனினும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் தன்னந்தனியாய் அரசியல் சட்டம் இயற்றும் பணியில் அம்பேத்கர் ஈடுபட்டார். பல்வேறு இன்னல்களைக் கடந்து,அவர் உருவாக்கிய 395 விதிகளும் 8 அட்டவணைகள் கொண்ட அரசியல் அமைப்புச்சட்டம் 1949 ஆண்டு சட்ட அவையில் வைக்கப்பட்டு ஏற்கப்பட்டது. அம்பேத்கர் உருவாக்கிய சட்ட அடிப்படையில் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று இந்தியா முழுமையான குடியரசு நாடாய் அறிவிக்கப்பட்டது.

அன்று முதல் ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் நாள் குடியரசுத் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய அரசு அம்பேத்கருக்கு 1981 ஆம் ஆண்டு "பாரத ரத்னா" என்னும் உயரிய விருதை வழங்கிப் பெருமைப் படுத்தியது.எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாய் நடத்தும் சமத்துவ இந்தியாவை உருவாக்க உழைத்தார்

Updated On: 6 Dec 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  5. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  7. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !