/* */

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறுவளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டஆட்சியர் ஆய்வு

பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்டஅலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறுவளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டஆட்சியர் ஆய்வு
X

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை கூட்டுறவு நியாயவிலைக்கடையில் அரிசியின் தரத்தை ஆய்வு  செய்த  மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறுவளர்ச்சித் திட்டப் பணிகளைமாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வுசெய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம்,அம்மாபேட்டைஊராட்சிஒன்றியம் ஊரகவளர்ச்சிமற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறுவளர்ச்சித் திட்டப் பணிகளைமாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் (15.3.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பின்னர் கூறியதாவது.

அம்மாபேட்டைஊராட்சி ஒன்றியம் நெய்குன்னம் ஊராட்சியில் வெண்ணாற்றில் நபர்டு சார்பில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்டபாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தும், தொடர்ந்து நெய்குன்னம் ஊராட்சியில் பொதுவினியோகதிட்டஅங்காடிமற்றும்,அம்மாபேட்டைஒன்றியத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுகடன் சங்க அங்காடியில் பொதுமக்களுக் குவழங்கப்படும் உணவுபொருட்கள் இருப்பு மற்றும் தரத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதனைத் தொடர்ந்து நெய்குன்னம், தீபாம்பாள்புரம் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்தும் , பள்ளி கட்டிடங்கள் பாதுகாப்பு குறித்தும் கழிப்பறை வசதிகள் மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பின்னர் திபாம்பாள்புரமகிராமத்தில் உள்ளஅங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்டஅலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .மேலும் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களிடம் மாதாந்திர உதவித்தொகை முறையாக வழங்கப்படுவது குறித்தும், குடிமைப் பொருட்கள் முறையாக வழங்கப்படுவது குறித்தும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை முறையாக அகற்றப்படுவது குறித்தும் கேட்டறியப்பட்டது.

முன்னதாக மாவட்டஆட்சித் தலைவர் தஞ்சாவூர் மாவட்டம் நெடுஞ்சாலைதுறைகட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பராமரிப்பில் உள்ள மாவட்ட முக்கிய நெடுஞ்சாலை தஞ்சாவூர்-கரம்பக்குடி- சீதாம்பாள்புரம் சாலைஅண்ணாநகர் --நாஞ்சிக்கோட்டை பைபாஸ் 2.40 கி.மீ நீளம் கொண்ட தற்போது உள்ள இரு வழித்தட சாலையினை நான்கு வழித்தட சாலையாக அகலப்படுத்தி இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை எல்லையில் மழைக் காலங்களில் மழைநீர் தேங்காவண்ணம் நடைபாதையுடன் கூடியவடிகால் பணியினை பார்வையிட்டு விரைந்துமுடித்திட நெடுஞ்சாலைதுறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார் .

அதனைதத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுசார்பில் பராமரிக்கப்பட்டுவரும் சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுதரமாக உள்ளதா எனநேரில் பார்வையிட்டுஆய்வுசெய்தார்.

இந்தஆய்வின் போதுகும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா,அம்மாபேட்டைஒன்றியக் குழுத் தலைவர் கலைச்செல்வன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் எஸ் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர். மணிகண்டன், (தஞ்சாவூர்)உதவிகோட்டப்பொறியாளர்கள்ரேணுகோபால, மோகனா, அம்மாபேட்டை வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் முருகன், ஆனந்தராஜ் மாவட்டகுழந்தைகள் பாதுகாப்புநலஅலுவலர் திலகவதி(பொ) அரசுஅலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்

Updated On: 16 March 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...