/* */

செஸ்ஒலிம்பியாட்: புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சதுரங்கம்- வினாடி வினாபோட்டிகள்

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சதுரங்கம்- வினாடி வினாபோட்டிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்

HIGHLIGHTS

செஸ்ஒலிம்பியாட்: புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சதுரங்கம்- வினாடி வினாபோட்டிகள்
X

செஸ் ஒலிம்பியாட்  விழிப்புணர்வுக்காக புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் நடத்தப்பட்ட சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்ற  மாணவிகள்

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற சதுரங்கப் போட்டி மற்றும் வினாடி வினா போட்டி நடைபெற்றது.

44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் 28.07.2022 முதல் 10.08.2022 வரை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி களை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் மாவட்ட நிருவாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி சதுரங்கப் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே வட்டார அளவிலான சதுரங்கப் போட்டிகளும், மாநில அளவிலான வினாடி வினா போட்டி இணையதளம் வாயிலாகவும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் சார்பில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற சதுரங்கப் போட்டி மற்றும் வினாடி வினா போட்டி (21.07.2022) நடைபெற்றது. இப்போட்டியில் சதுரங்கம் விளையாட்டு தொடர்பான வினாடி வினா போட்டியில் 40 நபர்களும், சதுரங்கப் போட்டியில் 10 மாணவிகளும், 36 மாணவர்களும் என மொத்தம் 86 நபர்கள் பங்கேற்று விளையாடினர். இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இவ்விளையாட்டுப் போட்டிகளை கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர்.கணேசன், மாவட்ட சதுரங்க கழக துணைத் தலைவர் அடைக்கலவன் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

Updated On: 21 July 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க