/* */

இளைஞர் திறன் திருவிழாவில் பயிற்சி பெறுவதற்கான சான்றிதழ்: அமைச்சர் ரகுபதி வழங்கல்

இளைஞர் திறன் திருவிழாவில் பயிற்சி பெறுவதற்கான சான்றிதழ்களை சட்டஅமைச்சர் ரகுபதி வழங்கினார்

HIGHLIGHTS

இளைஞர் திறன் திருவிழாவில் பயிற்சி பெறுவதற்கான சான்றிதழ்: அமைச்சர் ரகுபதி வழங்கல்
X

இளைஞர் திறன் திருவிழாவில் பயிற்சி பெறுவதற்கான சான்றிதழ்களை சட்டஅமைச்சர் ரகுபதி வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து இளைஞர் திறன் திருவிழாவில் பயிற்சி பெறுவதற்கான சான்றிதழ்களை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.

புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற இளைஞர் திறன் திருவிழாவில் இளைஞர்கள் பயிற்சி பெருவதற்கான சான்றிதழ்களை மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (16.07.2022) வழங்கினார்.

பின்னர், இந்நிகழ்ச்சியில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவின் எதிர்காலமாகிய இளைஞர்களை நல்வழிபடுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இளைஞர் திறன் திருவிழா மூலமாக 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்ட படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு முன்னனி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது அறிவித்தார். அதன் அடிப்படையில்,தமிழக அரசு மூலமாக தமிழ்நாடு ஊரக வாழ்வதார இயக்கம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் ஆகியவை இணைந்து தொழில் திறன் பயிற்சி முகாம்கள் நடத்த தற்போது பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

இப்பயிற்சி வகுப்புகள் மூலமாக சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது அறிவித்ததன் அடிப்படையில், பயிற்சிப்பெற்ற நபர்களுக்கு தொழில் தொடங்குவதற்கு அரசின் மானியமும், வங்கி கடன் உதவிகளும் ஏற்பாடு செய்து தரப்படும். இதன் மூலம் இளைஞர்கள் அனைவரும் தங்களது சொந்த காலில் நிற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இப்பயிற்சியில் நர்சிங், கம்ப்யூட்டர், தையல், ஏசி மெக்கானிக், எலக்ட்ரிசன், சில்லரை வணிகம், இருசக்கர வாகனம் பழுதுப் பார்த்தல், சிசிடிவி கேமரா பொருத்துதல் போன்ற 10 க்கும் மேற்பட்ட பயிற்சிகள், 15 திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளன. எனவே இளைஞர்கள் அனைவரும் இத்திட்டன் கீழ் வழங்கப்படும் பயிற்சிகளை முறையாக கற்று தங்கள் வாழ்வினை முன்னேற்றிக்கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் ரகுபதி.

இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜாள், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, வாழ்ந்துக்காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் ஜெய்கணேஷ், வருவாய் கோட்டாட்சியர்(பொ) கருணாகரன், கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Updated On: 17 July 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  2. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  5. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  6. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  7. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...
  8. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  9. குமாரபாளையம்
    நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை!
  10. ஈரோடு
    ஈரோட்டில் சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் ஏலம் ரத்து!