/* */

கலை பண்பாட்டுத்துறை போட்டிகளில் வென்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசளிப்பு

புதுக்கோட்டை மாவட்ட கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசித்தொகை அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

கலை பண்பாட்டுத்துறை போட்டிகளில் வென்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசளிப்பு
X

கலை, பண்பாட்டுத்துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்ட கலை பண்பாட்டுத்துறை சார்பில், நடத்தப்பட்ட கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக்கான காசோலை வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, காசோலைகளை வழங்கி வாழ்த்தினார். தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை, புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட , மாநில அளவிலான கலைப் போட்டிகளை நடத்திட ஆணையிட்டிருந்தது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் பரத நாட்டியம், குரலிசை, கருவியிசை, கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் இக்கலைப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.6,000 -மும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.4,500 -மும், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.3,500 -மும் என வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவிகளுக்கு காசோலைகளை ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் மு.க.சுந்தர், மாவட்ட அரசு இசைப் பள்ளி தலைமையாசிரியர் கோ.மா. சிவஞானவதி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 19 April 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்