/* */

பாரபட்சமின்றி பணிகள் ஒதுக்கீடு : நகர் மன்றக்கூட்டத்தில் புதுகை எம்எல்ஏ பேச்சு

மன்றத்தின் ஒப்புதல் அளித்த பணிகளை விரைவாக மேற்கொள்வதற்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது என நகர்மன்றத்தலைவர் பேசினார்

HIGHLIGHTS

பாரபட்சமின்றி பணிகள் ஒதுக்கீடு : நகர் மன்றக்கூட்டத்தில் புதுகை எம்எல்ஏ பேச்சு
X

புதுக்கோட்டை நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் எஸ். திலகவதி தலைமையில் நடந்தது, துணைத்தலைவர் எம். லியாகத்அலி, ஆணையர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ வை.முத்துராஜா கூட்டத்தில் பங்கேற்றார்.

புதுக்கோட்டை நகராட்சியில் பாரபட்சமின்ற திட்டப்பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் வை. முத்துராஜா தெரிவித்தார்.

புதுக்கோட்டை நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் எஸ். திலகவதி தலைமையில் நடந்தது, துணைத்தலைவர் எம். லியாகத்அலி, ஆணையர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ வை.முத்துராஜா கூட்டத்தில் பங்கேற்றார்.

நகராட்சி தலைவர் திலகவதி கூட்டத்தை தொடக்கி வைத்து பேசுகையில், கவுன்சிலர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றி கொண்டு வரும் வேளையில் மன்றத்தின் ஒப்புதல் அளித்த பணிகளை விரைவாக மேற்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நகராட்சியில் தலைவர்களுக்கு சிலை வைக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் சிலை வைக்க அனுமதி கிடையாது என அரசாணை வந்துள்ளது. இருப்பினும் புதுக்கோட்டை நகருக்கு பெருமை சேர்த்த தலைவர்களின் சிலைகளையும் ஓட்டுமொத்தமாக வைப்பதற்கு அரசின் அனுமதி பெற்று நடவடிக்கை மேற்கொள்ளபடும்.

கே.ஆர்.ஜி. பாண்டியன் (அதிமுக) தகவல் உரிமை சட்டம் தொடர்பாக கட்டண நிர்ணயம் கூடுதலாக வசூலிக்க கூடாது, ஒரே வார்டில் ஒருவருக்கே பணிகள் வழங்கப்பட்டுள்ளது, பாரபட்சம் காட்ட வேண்டாம். ஊழலை மறைக்க முயற்சி நடக்கிறது.

எட்வர்டுசந்தோஷ்நாதன்(திமுக) அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுகையில், கடந்த ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பணிகள் நிதி பற்றாக்குறையால் நின்ற நிலையில் அதனை மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை குற்றம் சொல்லக்கூடாது.

ராஜேஸ்வரி (திமுக) எனது வார்டில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், அம்மையாப் பட்டி குடிநீர் விநியோகம் செய்ய தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஜெயாகணேசன் (அதிமுக) பணிகள் வழங்குவதில் பாரபட்சம் இன்றி செயல்பட வேண்டும்.

எம். லியாகத்அலி (துணைத்தலைவர்) கட்சி பாகுபாடு காட்டுவைத போல் தவறான தகவல்களை தெரிவிக்க வேண்டாம்.

எஸ்.மூர்த்தி(திமுக) எனது வார்டில் பள்ளம் படுகுழிகளை உடனடி யாக சீரமைத்தமைக்கு நன்றி ராணியார் பள்ளி சந்து கழிவுநீர் கலந்த குடிநீர் வந்து கொண்டிருக்கிறது, வார்டில் சிதிலம டைந்த சாலைகள் செப்பனிட வேண்டும். 20 தெருவிளக்குள் எரியவில்லை.

கவிவேந்தன் (திமுக) கோவை மாவட்டம், கூடலூர் நகராட்சியில் குடியிருக்கும் ராணுவம் துணை ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் வீரர்களுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரி செலுத்துவதிலிருந்து அந்த நகராட்சி நிர்வாகம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதைப் போல புதுக்கோட்டை நகராட்சியில் வசிப்பவர்களுக்கும் வரி விலக்க அளிக்க வேண்டும்.

சுப.சரவணன்(திமுக) தங்கள் வார்டுகளுக்கு தேவையான வைவற்றை பெற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுங்கள் அதனை தவிர்த்து குறை கூறுவதை தவிர்க்க வேண்டும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடிநீர் பிரச்னை குறித்து எல்லோரும் தான் கூக்குரலிட்டோம், ஆனால் 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீ ர்விநியோகத்தை மேற்கொண்டு வருவதை பார்க்கிறோம். குடிசை மாற்று வாரிய வீடுகள் ஒதுக்கீடு தொடர்பாக காமராஜபுரத்தில் கட்சி பாகுபாடு பார்க்காமல் தான் வழங்கினோம். எனது காமராஜபுரம் பகுதி பெரிய பகுதி அதற்கான பணிகள் முழுமை பெறவில்லை.

எம். லியாகத்அலி(துணைத்தலைவர்) 42 வார்டை சேர்த்து ஒரே பகுதியாக இருந்தாலும் பாராட்சம் காட்டுவது கிடையாது

ராஜேஸ்வரி (காங்) திருக்கோகர்ணம் மாரியம்மன்கோயில் வடிகால்பணிகளை மேற்கொள்ள வேண்டும். சின்னகேணி தெரு குடிநீர் வரவில்லை, கோவில்பட்டியில் பாலம், யானை மால் வீதி போர்வெல் அமைத்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்,

பழனிவேலு (திமுக) 7 வருடமாக தண்ணீர் விநியோகம் செய்யாத போது குடிநீர் கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும். குடிசை மாற்றுவாரிய வீடு குடியிருப்பு பகுதிகளில் தெருவிளக்குகள் இருள்சூழ்ந்துள்ளதால் தெருவிளக்குகள் அமைத்திட வேண்டும், வீட்டு வரி செலுத்தும் போது கவுன்சிலர்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும். போர்வெல் போடுவதற்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாடு நிதி தேவை

கனகம்மன்பாபு(திமுக) நுாலகம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் வேளையில் கலைஞர் நுாலகம் பெயரிட வேண்டும், பஸ் ஸ்டாப் பகுதிகளில் பிளக்ஸ் பேனர்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,,

வேண்டுகோள்: புதுக்கோட்டை நகராட்சியில் குடிநீர்த்திட்டம்- பாதாள சாக்கடைத் திட்டங்கள் மூலம் ஏற்பட்டுள்ள கடன் சுமையை ஏற்கெனவே கலைஞர் கருணாநிதி முதல்வராகவும் துணை முதல்வராக ஸ்டாலினும் இருந்த போது தள்ளுபடி செய்ததைப் போல, தற்போது முதல்வராக உள்ள ஸ்டாலின் தள்ளுபடி செய்ய எம் எல் ஏ முத்துராஜா சட்டசபையில் குரல் கொடுத்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல தனித்தனியே வேண்டுகோள் விடுத்து பேசினர்,

பாரபட்சமின்றி திட்டப் பணிகள் ஒதுக்கீடு…

புதுகை எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா பேசுகையில், ஓட்டுப் போடாதவர்கள் கூட நாம் ஓட்டு போட தவறிவிட்டேமோ என நினைக்கும் அளவிற்கு தற்போது தமிழக முதல்வர் தலைமையிலான ஆட்சி செயல்பட்டு வருகிறது. கட்சி பாகுபாடு வார்டுகளில் காட்டப்படாமல் ,எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி விடுவிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.விடுப்பட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் திட்டம் அமலில் உள்ள பகுதிகளில் சீரமைப்பு என தமிழக அரசு ரூ 133 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

அரசு தலைமை மருத்துவமனை தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதை மக்களின் ஆதரவு பெற்றுள்ளது, விரைவில் 24 மணிநேர சேவைக்கு மாற்றப்படும். அதேபோல் 2 ஆரம்ப சுகாதார நிலையம் நகரின் விரிவாக்க பகுதியில் தொடங்கப்பட உள்ளது. நகராட்சி கடன் சுமை தொடர்பாக தமிழக முதல்வரின் கவனத்திற்சகு கொண்டு செல்ல கோரியுள்ளீர்கள். அமைச்சரிடம் கலந்தாலோசனை செய்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார் எம்எல்ஏ முத்துராஜா.

Updated On: 30 Dec 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்