/* */

புதுக்கோட்டை மாவட்டத்தில் 680 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கல்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்தில் 680 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கல்
X

அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோரிடம் விலையில்லா வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை பெற்றுக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகள்

விலையில்லா வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை பெற்றுக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 680பயனாளிகள்

முத்தமிழறிஞர் டாக்டர்கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில்,பொது மக்களுக்கு மருத்துவ முகாம்கள், விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்குதல்,வேலை வாய்ப்பு முகாம், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள்நடத்தப்படுகிறது.

அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஏழை,எளிய பொதுமக்களும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், ஏழை, எளியபொதுமக்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாவிற்கானை ஆணைகள்வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களின் மூலம் ஏழை, எளிய பொது மக்களின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், நீர்வழிப் புறம்போக்கு நிலங்கள், மேய்ச்சல், மந்தைவெளி, மயானம் மற்றும்பாட்டை என வகைப்பாடு செய்யப்பட்டுள்ள அரசுநிலங்கள் அத்தகைய உபயோகத்தில் இல்லாமல்நத்தமாக உபயோகத்தில் இருந்து அதில் பத்துஆண்டுகளுக்கு மேலாக வீடுகளைக் கட்டிகுடியிருப்போருக்கு அந்நிலங்கள் அரசின்உபயோகத்திற்கு தேவை இல்லை எனில் மாவட்டஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும்சம்பந்தப்பட்ட துறை அலுவலர் ஆகியோரைக்கொண்ட குழு அந்த நிலங்களை தணிக்கை செய்துஉள்ளாட்சி மன்றங்களில் தீர்மானங்களை பெற்று தகுதியின் அடிப்படையில் குடியிருப்புகளை வரன்முறைப்படுத்த தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டது.

அதன்படிநீண்ட காலமாக வீட்டுமனைப் பட்டா இல்லாமல் இருப்பவர்களுக்கு விலையில்லாவீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கியது குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்ததாவது;

தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொது மக்களின் நலன் காப்பதில் எண்ணற்ற நலத்திட்டங்களை இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழகத்தில் சிறப்பாக செயல் படுத்தி வருகிறார்கள். இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் ஏழை, எளிய பொது மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதாரம் உயர்வதற்கு வழிவகை ஏற்படுகிறது.

அதன்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், ஏழை,எளிய பொது மக்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ், அவர்களின் நீண்டகால கனவினை நிறைவேற்றும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்தில் 153பயனாளி களுக்கும், ஆலங்குடி வட்டத்தில் 61 பயனாளிகளுக்கும், அறந்தாங்கிநகராட்சியில் 216 பயனாளிகளுக்கும், பொன்னமராவதி வட்டத்தில் 250பயனாளிக ளுக்கும் விலையில்லா வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளிகளுக்குவிலையில்லா வீடுகள் கட்டி தருவதற்கு உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை பெற்றுக்கொண்டபுதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகள் அனைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

திருமயம் பகுதியைச் சேர்ந்த பயனாளி .நூர்ஜஹான் தெரிவித்ததாவது: கணவர் பெயர்காஜாமைதீன் மற்றும் 3 குழந்தைகளுடன் நச்சாந்துப்பட்டிகிராமத்தில் வசித்து வருகிறோம். எனது கணவர் வாடகைவண்டி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அதில் கிடைக்கும்குறைவான வருமானத்தைக் கொண்டு வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். மேலும் சொந்தமாக வீடு கட்டி அதில்வாழ்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும், சொந்த இடம் இல்லாத காரணத்தினால் எங்களது கனவு இல்லம் நிறைவேறாமல் இருந்து வந்தது.

இச்சூழ்நிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவினை வழங்குவதற்கு ஆணையிட்டு வழங்கியுள்ளார்கள். இதன்மூலம் எங்களது சொந்த வீடு கனவு நிறைவேறியதுடன் குடும்பத்துடன் எங்களது கனவு இல்லத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு வழிவகை ஏற்படுத்தியதமிழ்நாடு முதலமைச்சர் எனது சார்பில், எங்களது குடும்பத்திலும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த பயனாளி தெய்வாணை தெரிவித்ததாவது; எனது கணவர் சங்கர்கணேஷ். நாங்கள் அறந்தாங்கி பகுதியில் எங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். நானும், எனது கணவரும் கூலி வேலைக்குச்சென்று குடும்பத்தை நடத்தி வருகிறோம். இதன்மூலம் கிடைக்கும் சொர்ப்ப வருமானத்தைக் கொண்டு குழந்தைகளை படிக்க வைத்து,குடும்பத்தையும் நடத்தி வருகிறோம். இந்த வறுமையானசூழ்நிலையில் சொந்தமாக இடம் வாங்கி அதில் வீடு கட்டி வாழ்வதுஎன்பது எங்களால் இயலாத காரியமாகும்.

இந்நிலையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் இன்று எங்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.இதனைக்கொண்டு எங்களுக்கு தேவையான அளவில் வீடு கட்டிக்கொண்டுமகிழ்ச்சியுடன் வாழ்வதற்கும், எங்களது வாரிசுகளுக்கான திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் பேருதவியாக இருக்கும். எங்களது ஊரில் சொந்தவீட்டில் வாழ்ந்து, ஊரார்கள் மத்தியில் உரிய மரியாதையை ஏற்படுத்திக்கொடுத்த முதலமைச்சருக்கு எங்களது வாழ்நாள் முழுவதும் நன்றி உள்ளவர்களாக இருப்போம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களின்நலனிற்காக எண்ணற்றத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.அந்தவகையில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் சொந்த வீட்டுகனவுகளை நினைவாக்கும் வகையிலும், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ள விலையில்லா வீட்டுமனைப்பட்டாவினை அனைத்து மக்களும் உரிய முறையில் பயன்படுத்தி தங்களது வாழ்வினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். தொகுப்பு: க.பிரேமலதா,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,புதுக்கோட்டை மாவட்டம்.

Updated On: 31 Dec 2023 2:54 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...