/* */

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது

இது தவிர 1000 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த கனமழையால் முதல் கட்ட கணக்கெடுப்பின்படி மாவட்டத்தில் 6 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்கட்ட கணக்கெடுப்பின்படி 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.இதில் 1,000 ஏக்கர் 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது,259 குடிசை வீடுகள் 263 ஓட்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுமூன்று காளைகள் 81 பசுமாடுகள் 82 ஆடுகள் 20 இதர கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு முதல்கட்ட அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக இடிந்த வீடுகள் பயிர்கள் பாதிப்பு இறந்த கால்நடைகள் ஆகியவற்றைக் குறித்து இழப்பீடு வழங்குவதற்காக மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தி முதல்கட்ட அறிக்கையை அரசுக்கு அளித்துள்ளது

அதன்படி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக இதுவரை கணக்கிடப்பட்ட வகையில் 6000 ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஆயிரம் ஏக்கர் 33 சதவீதத்திற்கு மேல் பாதிப்படைந்துள்ளதாக அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் 249 குடிசை வீடுகள் பகுதியாகவும் 10 குடிசை வீடுகள் முழுவதுமாக பாதிப்படைந்துள்ளது.இதேபோன்று 253 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் 10 வீடுகள் முழுவதும் சேதமடைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதே போன்று மூன்று காளை மாடுகள் 81 பசுமாடுகள் 82 ஆடுகள் 20 இதர கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர 1000 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் மவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 17 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?