/* */

மக்கள் தொடர்பு முகாமில் 1,291 பயனாளிகளுக்கு ரூ.2.08 கோடியில் நலத்திட்ட உதவிகள்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், தேனூர் வருவாய் கிராமத்தில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது

HIGHLIGHTS

மக்கள் தொடர்பு முகாமில் 1,291 பயனாளிகளுக்கு ரூ.2.08 கோடியில் நலத்திட்ட உதவிகள்
X

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், தேனூர் வருவாய் கிராமத்தில், மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சித்தலைவர் .கவிதா ராமு தலைமையில்  நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 1,291 பயனாளிகளுக்கு ரூ.2.08 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், தேனூர் வருவாய் கிராமத்தில், மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சித்தலைவர் .கவிதா ராமு தலைமையில் (14.12.2022) நடைபெற்றது.

இம்முகாமில் தமிழக அரசு பல்வேறு அரசுத் துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களால் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இம்முகாமில் தோட்டக்கலைத்துறை, வேளாண் துறை, சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், கால்நடை பராமரிப்புத்துறை, பொதுசுகாதாரத்துறை, வேளாண் பொறியியல் துறை, வனத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

இம்முகாமில் வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தாட்கோ, மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில், 1,291 பயனாளிகளுக்கு ரூ.2,07,88,607 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வழங்கி பேசியதாவது;

தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில், கிராமங்கள் தோறும் மக்கள் தொடர்பு முகாம்களை நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி இன்றையதினம் தேனூர் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 1,291 பயனாளிகளுக்கு ரூ.2,07,88,607 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசின் சார்பில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்கள் தொடர்பு முகாமில் அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் கண்காட்சிகள் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் இக்கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை அறிந்துகொண்டு பயன்பெற வேண்டும்.

இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்கள் மூலமாக மக்களை தேடி சென்று அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு பேசினார்.

பின்னர், பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிரான, பாலின சமத்துவ உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக் கொண்டனர்.

இம்முகாமில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.சம்பத், வட்டாட்சியர் பிரகாஷ், ஊராட்சிமன்றத் தலைவர் கிரிதரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள்; கலந்து கொண்டனர்.

Updated On: 14 Dec 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!