/* */

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை ரூ.20.24 லட்சம் பறக்கும் படையினரால் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ 20 லட்சத்தில் 24 ஆயிரத்து 360 காக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை ரூ.20.24 லட்சம் பறக்கும் படையினரால் பறிமுதல்
X

புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணியை ஆட்சியர் கவிதா ராமு ஆய்வு செய்தார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 லட்சத்து 24 ஆயிரத்து 360 ரூபாய் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தேர்தல் புகார் தொடர்பாக இதுவரை 9 புகார்கள் பெறப்பட்டுள்ளது இதுவரை எந்த அரசியல் கட்சி மீதும் வழக்கு பதியப்படவில்லை.

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பேட்டி, புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளுக்கு தேர்தல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. 42 வார்டுகளிலும் 120 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ஆகியவற்றை வேட்பாளர்கள் பெயர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி நகராட்சி அலுவலகத்தில் இன்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இந்த பணியினை ஆய்வு செய்தார். ஒவ்வொருவரும் தனித்தனியாக அந்தந்த வேட்பாளர்கள் முன்னிலையில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கவிதா ராமு, மாவட்டத்தில் இதுவரை 20 லட்சத்து 25 ஆயிரத்து 366 ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது வரை தேர்தல் புகார்கள் தொடர்பாக கண்ட்ரோல் ரூம் மூலமாக 9 புகார்கள் வரப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை எந்த அரசியல் கட்சிகள் மீதும் வழக்கு பதியப்படவில்லை.

மாவட்டத்தில் தேர்தல் நடக்க உள்ள 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி இன்று முதல் தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாக வேட்பாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆட்சியர் இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் சரி பார்ப்பார்கள் என்று கூறினார்.

Updated On: 14 Feb 2022 12:11 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு