/* */

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 20 சமுதாய பண்ணைப் பள்ளிகள் தொடக்கம்

Community Farm School -புதுக்கோட்டை, திருவரங்குளம், அறந்தாங்கி மற்றும் விராலிமலை வட்டாரங்களில் 172 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது

HIGHLIGHTS

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 20 சமுதாய பண்ணைப் பள்ளிகள் தொடக்கம்
X

பயனாளிகளுக்கு சமுதாய பண்ணை மற்றும் திறன் பள்ளிகளை துவக்குவதற்கான மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா துவக்கி வைத்து காசோலைகளை வழங்கினார்.

Community Farm School -புதுக்கோட்டை மாவட்டம்வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் சமுதாய பண்ணை மற்றும் திறன் பள்ளிகளை தொடக்குவதற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வழங்கினார்.

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (முன்னர் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் தமிழக கிராம சூழலை மறுசீரமைக்க வெவ்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது. வறுமை ஒழிப்பைத் தாண்டி நிலையான வாழ்வாதாரத்தை அமைத்து அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு ஊரக நிறுவனங்களை ஊக்குவிப்பதுஇ நிதியுதவிக்கான வழிவகை செய்வது மற்றும் வேலைவாய்ப்புகளை பெருக்குவது போன்ற திட்டங்களை தமிழ்நாடு முழுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் செயல்படுத்த உள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் மற்றும் தமிழ்நாடு புதுவாழ்வு திட்டத்தின் நிறுவன மயமாக்கப்பட்ட நிதி முதலீடுகளை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டதே வாழ்ந்து காட்டுவோம் திட்டம்31 மாவட்டங்களில்இ 120 வட்டாரங்களில் உள்ள 3994 ஊராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தபடும். ஊரக நிறுவனங்களை ஊக்குவிப்பது, அவர்களுக்கு தேவையான நிதியுதவிகளை அமைத்து தருவது, வேலைவாய்ப்புகள் உருவாக்குவதே இந்த திட்டத்தின் குறிக்கோள்கள் ஆகும்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ், தொழில்சார் சமூக வல்லுனர்களுக்கான, தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு சமுதாய பண்ணை மற்றும் திறன் பள்ளிகளை துவக்குவதற்கான காசோலைகளை வழங்கினார்.

தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தி வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், ஊரக தொழில்களை மேம்படுத்தல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருவரங்குளம், அறந்தாங்கி மற்றும் விராலிமலை வட்டாரங்களைச் சார்ந்த 172 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ஊராட்சி அளவில் பணிபுரியும் தொழில் சார் சமூக வல்லுநர்களுக்கு உரிய தொழில் முனைவோர்களை கண்டறிதல், தொழில் திட்டம் தயார் செய்தல், தொழில் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய,பெற வேண்டிய சட்ட ரீதியான அனுமதிகள், தரக் குறியீடு செய்தல் , சந்தைப்படுத்துதல் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கும் வகையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் இணைந்து 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது.

அதன்படி, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 20 சமுதாய பண்ணைப் பள்ளிகள் துவங்கிட தலா ரூ. 64,000 வீதம் மொத்தம் ரூ.12,80,000 மும், 17 சமுதாய திறன் பள்ளிகள் துவங்கிட ரூ. 11,67,000 மும் மற்றும் 4 உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ரூ.75,000 வீதம் மொத்தம் ரூ.3,00,000 மும் மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ், 3 இளைஞர்களுக்கு கடன் உதவித் தொகையாக ரூ.1,82,000 என ஆகமொத்தம் ரூ.29,29,000 மதிப்பிலான காசோலைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ம.ஜெய்கணேஷ், முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் தேவக்குமார், கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குநர் கலைச்செல்வி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Nov 2022 9:42 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  2. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  3. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  5. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  6. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  7. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  8. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  10. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்