/* */

புதுக்கோட்டை அருகே திருமண மண்டபத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

திருமண மண்டபத்தை வாடகைக்கு விடும் முன்னதாக, அனைத்து பராமரிப்பு பணிகளும் முறையாக செய்திருக்க வேண்டும்

HIGHLIGHTS

புதுக்கோட்டை அருகே திருமண மண்டபத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞர்  உயிரிழப்பு
X

கீரனூர் திருமண மண்டபத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்து போன இளைஞர் தர்மராஜ் பழைய புகைப்படம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மின்சாரம் பாய்ந்து சமையல் உதவியாளர் உயிரிழந்தார்.

கீரனூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று திருமண விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுகோட்டை அருகே உள்ள சிதம்பரம்பட்டியை சேர்ந்த தர்மராஜ்(24) என்ற இளைஞர் சமையல் பணிக்காக சென்றுள்ளார்.

இன்று அதிகாலையில் சமையல் பணி செய்து கொண்டிருந்தபோது, சமையல் கூடத்தில் உள்ள எக்ஸாஸ்ட் பேனில் உள்ள மின்சார வயர் அறுந்து ஜன்னலில் உரசிக்கொண்டிருந்தது. இதை அறியாத, தர்மராஜ் அந்த ஜன்னலில் கை வைக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அங்கிருந்த, சக ஊழியர்கள் தர்மராஜை மீட்டு, கீரனூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கீரனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமண மண்டபத்தை வாடகைக்கு விடும் முன்னதாக, அனைத்து பராமரிப்பு பணிகளும் முறையாக செய்திருக்க வேண்டும். ஆனால், இந்த திருமண மண்டபத்தில் முறையாக பராமரிப்பு பணி செய்யாததால் சமையல் செய்ய சென்ற இளைஞரின் உயிர் பறிபோனது குறிப்பிடத்தக்கது.


Updated On: 9 Sep 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  3. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  4. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  5. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  6. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  7. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  8. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...
  9. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  10. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...