/* */

இல்லம் தேடி கல்வி மையம் சார்பில் ஆசிரியர்கள் மாணவர்கள் தன்னார்வலர்கள் சந்திப்பு

சோழகம்பட்டி இல்லம் தேடிக் கல்வி மைய சார்பில் ஆசிரியர்கள்,மாணவர்கள், தன்னார் வலர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது

HIGHLIGHTS

இல்லம் தேடி கல்வி மையம் சார்பில் ஆசிரியர்கள் மாணவர்கள் தன்னார்வலர்கள் சந்திப்பு
X

கந்தர்வகோட்டை ஒன்றியம் சோழகம்பட்டி இல்லம் தேடிக் கல்வி மைய சார்பில் ஆசிரியர்கள்,மாணவர்கள், தன்னார்வலர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.

கந்தர்வகோட்டை ஒன்றியம் சோழகம்பட்டி இல்லம் தேடிக் கல்வி மைய சார்பில் ஆசிரியர்கள்,மாணவர்கள், தன்னார்வலர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சோழகம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி மையம் சார்பாக ஆசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது‌ இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் பாண்டியலெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்ட இல்லம் தேடிக் கல்வி மைய மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கலையரசன் பேசியதாவது: கொரோனா கால கற்றல் இடைவெளியை போக்குவதற்காக தொடங்கப்பட்ட இல்லம் தேடி கல்வி மையம் சோழகம் பட்டியில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக வருகை தரும் மாணவ,மாணவிகளை பாராட்டுகிறோம். அடிப்படை திறன்களான வாசிப்பு பயிற்சி, கணித அடிப்படை திறன்கள் கூட்டல் ,கழித்தல்,பெருக்கல், வகுத்தல், ஆங்கில வாசிப்பு பயிற்சி உள்ளிட்டவை மையத்தில் சிறப்பாக செயல்படுத்தி வரும் தன்னார்வலர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மையத்திற்கு தொடர்ச்சியாக வருகை தராத மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு மையத்திற்கு தொடர்ச்சியாக வருகை தர வேண்டும் எனவும், தன்னார்வலர்கள் பெற்றோர்களை சந்தித்து இல்லம் தேடிக் கல்வி மையத்தில் நடைபெறக்கூடிய கற்றல், கற்பித்தல் முறைகளை பெற்றோர்களுடன் கலந்துரையாடல் வேண்டும்.

பள்ளிமேலாண்மைக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுடைய மைய செயல்பாடுகளை கலந்துரையாடல் செய்ய வேண்டும். வகுப்பு ஆசிரியர்களை சந்தித்து குறைதீர் கற்பித்தல் உள்ளிட்ட கற்பித்தல் முறைகளை ஆசிரியர்களுடன் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும், மாணவர்களுடைய வருகை பதிவை இல்லம் தேடி கல்வி மைய செயலியில் பதிவேற்ற வேண்டும். மையத்தில் சிறப்பு தினங்களை கொண்டாட வேண்டும்.

ஒவ்வொரு மாணவர்களின் வாசிப்பு திறனை அடைவு அட்டையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தன்னார்வலர்கள் வழங்கப்பட்டுள்ள கற்பித்தல் உபகரணங்களை மாணவர்களுக்கு பயன்படுத்த வேண்டும். இதுவரை அளிக்கப்பட்டுள்ள பயிற்சிகளை பயன்படுத்தி தன்னார்வலர்கள் கற்றல் கற்பித்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அருகில் உள்ள மாற்றுத்திறன் மாணவர்களையும் இணைத்து கற்பிக்க வேண்டும் என்றார் அவர்.

கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பேசும் பொழுது மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சியை அளிக்க பள்ளி நூலக புத்தகங்களை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மாடத்திமாள், மேரி நிர்மலா, டியர்லின் மெஜல்லா, ரேவதி, பிரியா, இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்கள் திவ்யா கார்த்திகா சித்ரா மகாலட்சுமி செண்பக பிரியா, வினோதினி ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆங்கில பட்டதாரி ஆசிரியர் சந்திரசேகர் நன்றி கூறினார்.

Updated On: 23 Dec 2023 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  2. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வீரர்கள் சாப்பிடும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் எவை தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ - மாற்ற முடியாத மாற்றங்களை (ஏ)மாற்றமின்றி...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தைக்கு இதெல்லாம் குடுங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தையோட நோய் எதிர்ப்பு சக்தி!
  8. வீடியோ
    🔴LIVE : BJP Tamilnadu State President K.Annamalai | Press Meet...
  9. கோவை மாநகர்
    கோடநாடு வழக்கு தொடர்பாக 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை
  10. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்