/* */

இல்லம் தேடிக் கல்வி மைய தொடக்க நிலை தன்னார்வலருக்கு கற்பித்தல் பயிற்சி

கந்தர்வக் கோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி மைய தொடக்க நிலை தன்னார்வலருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

இல்லம் தேடிக் கல்வி மைய தொடக்க நிலை தன்னார்வலருக்கு  கற்பித்தல் பயிற்சி
X

கந்தர்வக் கோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி மைய தொடக்க நிலை தன்னார்வலருக்கு எண்ணும் எழுத்தும் குறைதீர் கற்பித்தல் பயிற்சி.

கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி மைய தொடக்க நிலை தன்னார்வலருக்கு எண்ணும் எழுத்தும் குறைதீர் கற்பித்தல் பயிற்சி.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் அவர்கள் வழிக்காட்டலில் கந்தர்வகோட்டை ஒன்றிய தொடக்க நிலை இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலருக்கு எண்ணும் எழுத்தும் குறைதீர் கற்பித்தல் பயிற்சி புதுநகர், கோமாபுரம், வேலாடிப்பட்டி கலலாக்கோட்டை, வட்டார வள மையம் ஆகிய குறுவள மையங்களில் நடைபெற்றது. வட்டார வள மையத்தில் நடைபெற்ற பயிற்சியை மேற்பார்வையாளர் (பொ) பிரகாஷ் தொடங்கி வைத்தார். தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சியாக கடந்த மாதம் ஐந்தாம் கட்டகம் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக குறைதீர் கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் தமிழ், ஆங்கிலம் கணிதம் ஆகிய பாடங்களில் தமிழில் அகர வரிசை முதல் ஊகார வரிசை வரையும், ஆங்கிலத்தில் வார்த்தைகள் உச்சரிப்பு, கணிதத்தில் எண்களை அறிவோம், ஏறுவரிசை, இறங்கு வரிசை உள்ளிட்டவை குறித்து தொடக்க நிலை தன்னார்வலருக்கு ஆறாம் கட்ட பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் குழந்தை மைய கற்றலை சிறப்பாக எடுத்துச் செல்லவும், மாணவர்களின் கற்றல் இடைவெளியை போக்கவும், மொழி மற்றும் கணித பாடங்களின் அடிப்படை திறன்களை மதிப்பீடு செய்யும் வகையிலும், தன்னார்வலர்கள் மாணவர்களின் அடிப்படை திறன்கள், தினசரி வருகை பதிவை இல்லம் தேடிக் கல்வி செயலியில் பதிவு செய்தல் சார்ந்து எடுத்துக் கூறப்பட்டது.

இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் அ. ரகமதுல்லா பயிற்சியை ஒருங்கிணைத்தார்கள். இப்பயிற்சியில் கருத்தாளராக ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கிலிமுத்து பாரதிதாசன், ராஜேஸ்வரி, தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி, ஜெயக்குமார்,சின்னராசா, ஆசிரியர்கள் அமுதா,ரேவதி,புனிதா,கனிமொழி, பிளாண்டா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி வழங்கினார்.

Updated On: 18 Dec 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?